சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்ததையடுத்து, ஆப்பிள், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலி அதிகாரபூர்வமாக இன்று நீக்கப்பட்டது.
இந்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாகவும், தனிப்பட்ட மனிதர்களின் எந்தவிதமான தகவல்களையும், சீனா உள்பட எந்த வெளிநாட்டுக்கும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அரசுக்கு விளக்குவோம் என்று டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சறுத்தலாக இருப்பதாகக் கூறி ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நேற்றுத் தடை விதித்தது. இந்தத் தடையில் புகழ்பெற்ற டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இடம் பெற்றிருந்தன
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்ம்களில் மொபைல் செயலிகள் பயனர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளில் இருக்கும் சர்வர்களுக்கு விற்பகப்படுவதாக மத்திய அ ரசுக்கு புகார்கள் வந்ததையடுத்து, இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
» கரோனாவுக்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு: அடுத்த மாதம் பரிசோதனை
இந்த 59 செயலிகளில் புகழ்பெற்ற வீசாட், பிகோ லைவ், ஹெலோ, லைக்கி, கேம்ஸ்கேனர், டிக்டாக், ஷேர்இட், யுசிபிரவுசர்,விகோ வீடியோ, எம்ஐ வீடியோ கால், கிளாஸ் ஆப் கிங்ஸ், கிளப் பேக்டரி உள்ளிட்ட பல்வேறு செயலிகள் அடங்கும்.
மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலி அதிகாரப்பூர்வமாக இன்று நீக்கப்பட்டது. ஆனால், டிக்டாக் நிறுவனம் தாமாக முன்வந்து தனது செயலியை நீக்குமாறு கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் டிக்டாக் நிர்வாகத்தின் இந்தியத் தலைவர் நிகில் காந்தி அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது
சீனாவைச் சேர்ந்த டிக்டாக் உள்பட 59 செயலிகள் உள்நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அதற்கு மத்திய அரசு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாங்கள் மத்திய அரசின் உத்தரவுக்கு கட்டுப்படுகிறோம். எங்களை அழைத்து விளக்கம் கேட்டால், அரசு தரப்பிடம் அனைத்துவிதமான விளக்கத்தையும் அளிக்க தயாராக இருக்கிறோம்.
இந்தியர்கள் உள்ளிட்ட யாருடைய தனிப்பட்ட தகவல்களையும் சீனா உள்பட எந்த வெளிநாட்டிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை தெரிவிப்போம்.தனிப்பட்ட மனிதர்களின் அனைத்து விவரங்களையும் இந்தியச் சட்டத்துக்கு உட்பட்டு தொடர்ந்து பாதுகாப்போம்.
எதிர்காலத்திலும் எந்தவிதமான தகவல்களையும் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என்பதையும் தெரிவிப்போம். தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள், மரியாதைக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago