இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு மாநிலத்திலிருந்து வேறுமாநிலம் செல்வோர் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும்; தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அமலில் உள்ளன.
இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள பெரும்பாலான மக்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், ஒடிசா அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை மாநில அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக ஒடிசா சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகையாக இதுவரை ரூ.58.4 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago