இந்திய இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குக்கு ஊறு விளைவிப்பதாக சீனாவின் 59 மொபைல் செயலிகளைத் தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69-ஏ-யின் கீழ் தன் அதிகாரத்தைச் செயல்படுத்தியுள்ளதாக அமைச்சக அறிவிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
''கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தொழில்நுட்ப முன்னேற்றங்களில் புதுமையைப் புகுத்துவதில் முன்னோடியாக உள்ளது. டிஜிட்டல் வெளியில் இந்தியா ஒரு முதன்மைச் சந்தையாகவும் திகழ்கிறது.
ஆனால், அதே சமயத்தில் 130 கோடி இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு, மற்றும் தனியுரிமைக் கொள்கையைப் பாதுகாப்பது ஆகியவை பற்றிய கவலைகளும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் இத்தகைய கவலைகள் நம் நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் நிலைக்கும் சென்றிருப்பதாக பலராலும் கவலை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்ம்களில் மொபைல் செயலிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக பல தரப்பிலிருந்தும் எங்களுக்குப் புகார் வந்தவண்ணம் இருந்தன. அதாவது பயனாளர்கள் தரவுகள் திருடப்படுவதாகவும் அனுமதியின்றிப் பயனாளர்கள் தரவுகள் இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்களுக்கு மாற்றப்படுவதாகவும் எங்களுக்குப் புகார்கள் வந்தன.
இந்தத் தரவுகள் சேகரிப்பு , புதிய தகவல்களைப் பெறுவதற்காக முந்திய தரவுகளை அலசுவது ஆகியவற்றை தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் சக்திகள் தேச ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதற்காகப் பயன்படுத்தலாம் என்ற அச்சுறுத்தல் மிகவும் ஆழமான கவலைகளை உருவாக்கவல்லது.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், மத்திய உள்விவகார அமைச்சகம் ஆகியவையும் இந்த தீங்கு விளைவிக்கும் செல்போன் செயலிகளை முடக்கப் பரிந்துரைத்தன.
இதனடிப்படையிலும் இது தொடர்பான நம்பகமான தகவல்களின் அடிப்படையிலும் இத்தகைய செயலிகள் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்திய அரசு செல்பேசி மற்றும் செல்பேசி அல்லாத இணையதளச் செயலிகளின் பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கும் முடிவை எடுத்துள்ளது.
இந்தத் தடையினால் கோடிக்கணக்கான இந்திய செல்பேசி மற்றும் இணையதளப் பயன்பாட்டாளர்களைப் பாதுகாக்கும். இந்திய சைபர்வெளியின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது''.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 59 செயலிகளின் பட்டியல்
1. TikTok
2. Shareit
3. Kwai
4. UC Browser
5. Baidu map
6. Shein
7. Clash of Kings
8. DU battery saver
9. Helo
10. Likee
11. YouCam makeup
12. Mi Community
13. CM Browers
14. Virus Cleaner
15. APUS Browser
16. ROMWE
17. Club Factory
18. Newsdog
19. Beutry Plus
20. WeChat
21. UC News
22. QQ Mail
23. Weibo
24. Xender
25. QQ Music
26. QQ Newsfeed
27. Bigo Live
28. SelfieCity
29. Mail Master
30. Parallel Space
31. Mi Video Call — Xiaomi
32. WeSync
33. ES File Explorer
34. Viva Video — QU Video Inc
35. Meitu
36. Vigo Video
37. New Video Status
38. DU Recorder
39. Vault- Hide
40. Cache Cleaner DU App studio
41. DU Cleaner
42. DU Browser
43. Hago Play With New Friends
44. Cam Scanner
45. Clean Master - Cheetah Mobile
46. Wonder Camera
47. Photo Wonder
48. QQ Player
49. We Meet
50. Sweet Selfie
51. Baidu Translate
52. Vmate
53. QQ International
54. QQ Security Center
55. QQ Launcher
56. U Video
57. V fly Status Video
58. Mobile Legends
59. DU Privacy
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago