போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தலைமை அலுவலகம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ளது. உலகளவில் போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பான அறிக்கையை சமீபத்தில் அது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2018-ம் ஆண்டில் உலகளவில் போதைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் 26.9 கோடிபேருக்கு இருந்துள்ளது. இது கடந்த 2009-ம் ஆண்டில் இருந்ததை விட 30 சதவீதம் அதிகம். விடலைப் பருவத்தினரும் இளைஞர்களும் அதிகளவில் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். 2004-ம் ஆண்டில் நடந்த ஆய்வுகளோடு ஒப்பிட்டால் ஓபியாய்ட் என்ற போதைப் பொருளின் பயன்பாடு இந்தியாவில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டுக்கும் 2018-ம் ஆண்டுக்கும் இடையேஉலகம் முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு போதைப் பொருட்கள் இருந்தாலும் ஹெராயின் மற்றும் கொகைன் ஆகிய போதைப் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த 2 போதைப் பொருட்களும் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
உலகளவில் போதைப் பொருள் சந்தையில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. மத்திய ஆசியாவிலும்ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளிலும் ஓபியாய்டுக்கு மாற்றாக சிந்தெடிக்ஸ் வகை போதைப் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2008-ல் இருந்து2018 வரை ரஷ்யாவில் ஓபியாய்டு போதை பொருட்களுக்கான சந்தை 80 சதவீதம் சரிந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago