3 லட்சம் பேர் குணமடைந்தனர்; இந்தியாவில் ஏறக்குறைய ஒரே நாளில் கரோனாவால் 20 ஆயிரம் பேர் பாதிப்பு: 16 ஆயிரத்தைக் கடந்தது உயிரிழப்பு

By பிடிஐ

இ்ந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்பும் 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது

இந்தியாவில் கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19 ஆயிரத்து 906 ஆக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 859 பேராக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 5-வது நாளாக நாள்தோறும் 15 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 1-ம் தேதி முதல் இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 9 ஆயிரத்து 712 ஆக உயர்ந்து, மீள்வோர் சதவீதம் 58.56 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 51 ஆக அதிகரி்த்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 410 பேர் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 16 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 167 பேர் உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 68 பேர், டெல்லியில் 66, உத்தரப்பிரதேசத்தில் 19 , குஜராத்தில் 18, மேற்கு வங்கத்தில் 13, ராஜஸ்தான், கர்நாடகத்தில் 11 பேர் உயிரிழந்தனர்

ஆந்திராவில் 9 பேர், ஹரியாணாவில் 7 பேர், பஞ்சாப், தெலங்கானாவில் தலா 6 பேர், மத்தியப்பிரதேசத்தில் 4 பேர், ஜம்மு காஷ்மீரில் இருவர், பிஹார், ஒடிசா, புதுச்சேரியில் தலா ஒருவர் பாதி்க்கப்பட்டுள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 7,273 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,558 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,789 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,025 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 629 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 550 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 649 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 391 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 243 ஆகவும், ஹரியாணாவில் 218 ஆகவும், ஆந்திராவில் 157 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 191 பேரும், பஞ்சாப்பில் 128 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 93 பேரும், பிஹாரில் 59 பேரும், ஒடிசாவில் 18 பேரும், கேரளாவில் 22 பேரும், உத்தரகாண்டில் 37 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 9 பேரும், ஜார்க்கண்டில் 12 பேரும், அசாமில் 9 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 10 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 133ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,188 பேராக அதிகரித்துள்ளது. 49,301 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 44,094 ஆகவும் அதிகரித்துள்ளது.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 30,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,409 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 16,944 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 12965 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 21,549 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 16,711 பேரும், ஆந்திராவில் 12,285 பேரும், பஞ்சாப்பில் 5,056 பேரும், தெலங்கானாவில் 13,436 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 6,966 பேர், கர்நாடகாவில் 11,923 பேர், ஹரியாணாவில் 13,427 பேர், பிஹாரில் 8,931 பேர், கேரளாவில் 4,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,110 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 6,350பேர், சண்டிகரில் 428 பேர், ஜார்க்கண்டில் 2,339 பேர், திரிபுராவில் 1,259 பேர், அசாமில் 6,816 பேர், உத்தரகாண்டில் 2,623 பேர், சத்தீஸ்கரில் 2,545 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 894 பேர், லடாக்கில் 960 பேர், நாகாலாந்தில் 387 பேர், மேகாலயாவில் 47 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 177 பேர், புதுச்சேரியில் 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 221 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 148 பேர், சிக்கிமில் 87 பேர், மணிப்பூரில் 1,092பேர், கோவாவில் 1,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்