சுயசார்பு வேலைவாய்ப்பு, தன்னம்பிக்கை இந்தியாவுக்கான அழைப்பு என்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் பொருளாதார வலிமையையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிட்டன் 90 வது பிறந்த நாள் விழாவில் இன்று உரையாற்றினார். அப்போது அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை ஜோசப் மார் தோமா அர்ப்பணித்துள்ளார் என்றும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் வறுமையை அகற்றுதல் குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று குறிப்பிட்டார். கர்த்தராகிய கிறிஸ்துவின் அப்போஸ்தலரான செயிண்ட் தாமஸின் உன்னதமான கொள்கைகளுடன் மார் தோமா தேவாலயம் நெருக்கமாக தொடர்புடையது. ”
இந்தியாவில் பல்வேறு மதங்களின் ஆன்மீகச் செல்வாக்குகளுக்கு எப்போதும் வாசல் திறந்திருக்கும் என்று பிரதமர் கூறினார்.
ஜோசப் மார் தோமா பற்றி குறிப்பிடும் போது, நல்லொழுக்கமும், பணிவும் நல்ல செயல்களில் எப்போதும் பலனளிக்கும். இந்த மனப்பாங்குடன் தான் மார் தோமா சர்ச், நமது சக இந்தியர்களின் வாழ்க்கையில், குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வர பணியாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மார் தோமா சர்ச், ஒரு முக்கிய பங்காற்றியது என்றும், தேசிய ஒருங்கிணைப்புக்கு உழைப்பதில் முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கொவிட்-19 என்பது மக்களின் உயிருக்கு ஆபத்தான ஒரு உடல் நோய் மட்டுமல்ல, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளில் கொண்டு வர வேண்டிய மாற்றத்தை நோக்கியும் நம் கவனத்தை திருப்பியது என்று பிரதமர் தெரிவித்தார்.
உலகளாவியத் தொற்று நோயிலிருந்து ஒட்டு மொத்த மனிதகுலமும் மனிதம் மூலமாக மட்டுமே குணமடைய முடியும் என்பதை இந்த சூழல் உணர்த்துகிறது என்றும், மேலும் புவியில் நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் பரவ முடிந்த அனைத்தையும் செய்யும் படி பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்டார். கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா, உறுதியாகப் போராடுகிறது என்றும் அவர் கூறினார்.
ஊரடங்கு காலத்தில், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல முயற்சிகள் மற்றும் மக்களின் கரோனாவுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றின் காரணமாக, இந்தியா மற்ற நாடுகளை விட மிகச் சிறந்த இடத்தில் உள்ளது என்றும், இந்தியாவில் நோயிலிருந்து மீள்பவர்கள் விகிதம் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.
இதன் காரணமாக வைரசின் தீவிரம் எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது. கரோனா காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கு 12 என்ற அளவில் இருப்பதையும், இத்தாலியில் இது ஒரு மில்லியனுக்கு 574 ஆக இருப்பதையும் அவர் சுட்டி காட்டினார். மேலும், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவை விட மிக அதிகம் என்றும் கூறினார். 85 கோடி மக்கள் வசிக்கும் லட்சக்கணக்கான கிராமங்கள் கரோனா வைரஸால் கிட்டத்தட்ட தீண்டத்தகாத நிலையில் உள்ளன என்று கூறினார்.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மக்களும் ஈடுபடுவதால், இதுவரை நல்ல பலன்களைத் தந்துள்ளதாகவும், இருப்பினும் நமது பாதுகாப்பைக் குறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இப்போது நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும், முகக்கவசங்கள் அணிவது, தனி நபர் விலகல், நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, ஆகியவை மிக முக்கியமானது என்று தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களில், பொருளாதாரம் தொடர்பான குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பிரதமர் கூறினார். கடலில் இருந்து விண்வெளி வரை, பண்ணைகள் முதல் தொழிற்சாலைகள் வரை மக்களை நேசத்துடன் அரவணைத்து, வேகமான வளர்ச்சியைக் காண முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
சுயசார்பு வேலைவாய்ப்பு, தன்னம்பிக்கை இந்தியாவுக்கான அழைப்பு என்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் பொருளாதார வலிமையையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யுங்கள் உள்ளூர்த் தயாரிப்புகளை வாங்குங்கள்’ என்ற அழைப்பு பலரின் வீடுகளில் செழிப்பின் விளக்கை ஏற்றி வைக்கும் எனக் கூறினார்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரியின் மீன் வளத்திட்டம் குறித்து பேசிய பிரதமர், இருபதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்ட இந்தத் திட்டம் மீன்வளத் துறையை மாற்றவும், ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், ஐம்பத்தைந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்கவும் உள்ளதாக தெரிவித்தார். தொடர் சந்தை வாய்ப்புகளை வலுவாக மாற்றுவதற்கான சிறந்த தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வசதி உறுதி செய்யப்படும். இந்தத் திட்டங்களால் கேரளாவில் உள்ள மீனவர்கள் பல்வேறு வகையிலும் லாபம் பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சீர்திருத்தங்கள் விண்வெளிச் சொத்துக்கள் மற்றும் செயல்பாடுகளை அதிக அளவில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் என்று பிரதமர் கூறினார். தரவுகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகல் மேம்படும். கேரளாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலும் பல இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளவர்கள் இந்த சீர்திருத்தங்களால் பயன் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கான உணர்திறன் மற்றும் நீண்டகாலப் பார்வை ஆகியவற்றால் அரசாங்கம் வழிநடத்தப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
அது மட்டுமன்றி மக்கள் நலம் சார்ந்த முடிவுகள் அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் எடுக்கப்படுவதாகவும், டெல்லியில் உள்ள வசதியான அரசு அலுவலகங்களிலிருந்து எடுக்கப்படுவது அல்ல என்றும் தெரிவித்தார். இது ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு வங்கிக் கணக்கை அணுகுவதை உறுதி செய்துள்ளது, 8 கோடிக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு புகை இல்லாத சமையலறைகள் கிடைத்துள்ளன, 1.5 கோடிக்கும் அதிகமான வீடுகள் வீடற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான இந்தியாவும் ஆயுஷ்மான் பாரத் மூலம் இலவசமாக கழிப்பிடங்களைக் கட்டித் தந்துள்ளது.
ஏழைகளுக்கு, ஒரு நாடு - ஒரு ரேஷன் கார்டு திட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் ரேஷன்களைப் பெற உதவியது என்று பிரதமர் கூறினார். நடுத்தர வர்க்கத்தைப் பொறுத்தவரை, எளிதாக வாழ்வதை அதிகரிக்க பல முயற்சிகள் கொண்டு வரப்பட்டன.
விவசாயிகளைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அதிகரிக்கப்பட்டு அவை சரியான விலையைப் பெறுவதை உறுதிசெய்தன. பெண்களைப் பொறுத்தவரை, பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களின் உடல்நலத்தில் சரியான கவனம் செலுத்தப்படுவதுடன், மகப்பேறு விடுப்பை விரிவாக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைப் பாதை சமரசம் செய்யப்படுவதை தவிர்க்க உதவுகிறது.
இந்திய அரசு தனி மனித நம்பிக்கை, பாலினம், சாதி, மதம் அல்லது மொழி ஆகியவற்றை கொண்டு பாகுபாடு காட்டவில்லை என்றும் 130 கோடி இந்தியர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் எண்ணத்தால் வழிநடத்தப்படுகிறது என்றும் நமது வழிகாட்டும் ஒளி இந்திய அரசியலமைப்பு என்றும் பிரதமர் கூறினார்.
நமது நடவடிக்கைகள் தேசிய வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பதைப் பற்றி சிந்திக்க அவர் அழைப்பு விடுத்தார். நாங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்வோம், உள்ளூர் தயாரிப்புகளையே வாங்குவோம் என்று இப்போது இந்தியா கூறுவதாக தெரிவித்தார். இது பலரின் வீடுகளில் செழிப்பின் விளக்கை ஏற்றி வைக்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago