நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மட்டும் 85 சதவீத அளவிற்கு இருப்பதாகவும், மொத்த உயிரிழப்பில் 87 சதவீதம் இந்த மாநிலங்களில் நிகழ்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா குறித்த அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக்குழுவின் 17ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது.
மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் நிர்மாண் பவனில் இருந்து காணொலி மூலம் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி, மத்திய சுகாதாரக் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.
நாட்டில் கரோனா நோயின் தற்போதைய நிலவரம் குறித்தும், குணம் அடைவோர் எண்ணிக்கை, உயிரிழப்போர் எண்ணிக்கை, நோய் பாதிப்பு இரட்டிப்பாக்கும் விகிதம், மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனை ஏற்பாடுகள், வலுப்படுத்தப்பட்டுள்ள உடல் நல கட்டமைப்புகள், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள நிலைமைகள் ஆகியவை குறித்து அமைச்சர் குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டது.
நோய் தீவிரமாக உள்ள மாநிலங்களில் 85.5 சதவிகிதம் எட்டு மாநிலங்களில் (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா குஜராத் உத்திரப்பிரதேசம் ஆந்திரப்பிரதேசம் மேற்குவங்கம்) இருந்தாகும். இந்தியாவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 87 சதவீதம் இம்மாநிலங்களில் நேரிட்டன. இதுநாள் வரை பொது சுகாதார நிபுணர்கள், பெருந்தொற்று நோய் அறிவியலாளர்கள், மருத்துவர்கள், துணைச்செயலர் அளவிலான நிபுணர்கள் கொண்ட 15 மத்திய குழுக்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், தொழில்நுட்ப உதவி அளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொடர்பான பணிகளை வலுப்படுத்துவதற்காக மற்றொரு மத்தியக் குழு குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றுள்ளது. ITIHAS மற்றும் ஆரோக்கிய சேது ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் அமைச்சர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நோய் தீவிரமாக உள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிவது; நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது ஆகியவற்றுக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் இவற்றைப் பயன்படுத்துகின்றன. நோய்க் கட்டுப்பாட்டு உத்திகளுக்கு ஆயத்தம் அடைவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம் ஆர்) மேற்கொள்ளும் பரிசோதனை உத்திகள் குறித்து விரிவான விளக்கம் ஒன்றை இக்கழகத்தின் தலைமை இயக்குநர் பார்கவா வழங்கினார். சீராலஜிகல் ஆய்வு குறித்தும், பல்வேறு பரிசோதனைகள் மூலமாக நாளொன்றுக்கு பரிசோதனை செய்யப்படும் அளவை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் அவர் விளக்கினார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 479 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன . இது நாள் வரை மொத்தம் 79,96 ,707 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன கோவிட்-19 நோய் தொடர்பாக மட்டும் மேற்கொள்ளப்பட உள்ள ஆய்வுகளுக்காக 1026 தனிப்பட்ட ஆய்வுக்கூடங்கள், தற்போது இந்தியாவில் உள்ளன. இதில் 741 ஆய்வுக்கூடங்கள் அரசுத் துறைக்குச் சொந்தமானவை. 285 ஆய்வுக் கூடங்கள், தனியார் ஆய்வுக்கூடங்கள் என்று அவர் கூறினார். நாட்டில் அதிகரித்து வரும் மருத்துவக் கட்டமைப்பு வசதி குறித்தும் அமைச்சர் குழுவிற்கு எடுத்துக் கூறப்பட்டது.
176275 தனிப்படுக்கைகள், 22940 தீவிர சிகிச்சைப் பிரிவுப்படுக்கைகள், 77268 பிராணவாயு உதவி வழங்க கூடிய படுக்கைகள் கொண்ட வசதிகளுடன் கூடிய கரோனா நோய் சிகிச்சைக்கான 1039 தனிப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. 139483 தனிப் படுக்கைகள், 11539 தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 51321 பிராணவாயு உதவி அளிக்கக்கூடிய படுக்கைகள் கொண்ட கரோனா சுகாதார மையங்களும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
கோவிட் நோயாளிகளுக்கு கவனம் செலுத்தும் 8958 கோவிட் கேர் மையங்கள் உள்ளன இவற்றில் 810621 படுக்கைகள் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைப்புகளுக்கு 185.11 லட்சம் N95 முகக்கவசங்களையும், 116 .74 தனிநபர் பாதுகாப்புக் கவசங்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago