பெங்களூரு: சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கர்நாடகாவில் முறைகேடாக 60 ஜிஎஸ்டி பதிவுகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் ஒரே நிறுவனம் பல ஜிஎஸ்டி பதிவுகளுடன் செயல்படுவதாக வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், பெங்களூருவில் குறிப்பிட்ட முகவரியில் இருந்த அந்நிறுவனத்தில் வணிக வரித் துறையினர் சில தினங்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு நிறுவனத்துக்கு பதிலாக கிடங்கு ஒன்று மட்டுமே இருந்தது. இதையடுத்து, அந்தக் கிடங்குக்குள் அதிகாரிகள் சென்று பார்த்தபோது, அங்கு ஏராளமான சீன தயாரிப்பு பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அந்தக் கிடங்கை வாடகைக்கு எடுத்திருந்த சீனாவைச் சேர்ந்த அந்த நபர், வெவ்வேறு பெயர்களில் 60 ஜிஎஸ்டி பதிவுகளை முறைகேடாக பெற்று வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த கிடங்குக்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள அந்த சீன நபரையும் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago