கேரளாவில் வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கடைசி எல்லைப் பகுதியான ஸ்ரீகங்காநகர் என்ற இடத்தில் மழை தொடங்க 45 நாட்கள் ஆகும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே ஸ்ரீகங்காநகரில் அதாவது ஜூலை 8-ம் தேதியே பருவமழை தொடங்கும் என்றும் நாடு முழுவதும் இரண்டு வாரங்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானின் மற்ற பகுதிகள் மற்றும் ஹரியாணா, பஞ்சாப் ஆகிய பகுதிகளில் நேற்று முன்கூட்டியே பருவமழை தொடங்கியதால் நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பருவமழைக் காலம் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு பகுதியை நோக்கி நகருவதால் மத்திய இந்தியாவில் முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி நாடு முழுவதும் பருவமழை இருந்ததாகவும் அதன் பிறகு இந்த ஆண்டு முன்னதாகவே பருவமழை நாடு முழுவதும் பெய்யத் தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago