சீனாவிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது ராஜீவ் காந்தி அறக்கட்டளை : பாஜக கடும் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்திலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதி வரப்பெற்றுள்ளது என்று பாஜக வியாழனன்று காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டை எழுப்பியது.

சுதந்திர வாணிப ஒப்பந்தத்தை இருநாடுகளிடையே ஊக்குவிக்க லஞ்சமாக அளிக்கப்பட்டதா என்று பாஜக, காங்கிரஸ் கட்சியை நோக்கி கடும் கேள்வியை எழுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மத்தியப் பிரதேச மெய்நிகர் பேரணியில் ஜே.பி.நட்டாவுடன் சேர்ந்து காங்கிரஸை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்பது காங்கிரஸ் கட்சியின் ஒரு நீட்சிதான் என்று ரவிசங்கர் பிரசாத் அறுதியிட்டார். “2009-11-ல் இந்தியா-சீனா இடையே சுதந்திர வாணிப ஒப்பந்தத்தை ஊக்குவிக்க ராஜீவ் காந்தி அறக்கட்டளை பிரச்சாரித்தது. இந்திய - சீன சுதந்திர வாணிபத்தை, “விரும்பத்தக்கது, எளிதானது, பயன் தரக்கூடியது” என்று காங்கிரஸ் வர்ணித்தது.

சீனாவுடனான வாணிப பற்றாக்குறை விவகாரத்தை பல ஆண்டுகளாக இந்தியா குறை எழுப்ப போராடி வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேஜகூ பிராந்திய ஒட்டுமொத்த பொருளாதாரக் கூட்டுறவில் இணைய மறுத்து வருகிறது.

சீனாவுடனான சுதந்திர வாணிப ஒப்பந்தத்தை ஊக்குவிக்க சீனா ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு லஞ்சமாக நிதியளித்ததா? காங்கிரஸ் தலைமை ஐமுகூ ஆட்சியில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 33 மடங்கு அதிகரித்தது, அதற்குத்தான் லஞ்சமாக நிதியா?” என்று ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் குற்றச்சாட்டைத் தீவிரப்படுத்திய போது, “அன்னியப் பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 1976 விதிமுறைகளை இந்த அன்பளிப்பு மீறியுள்ளதாக சந்தேகிக்கிறோம். எந்த ஒரு கல்வி அல்லது பண்பாட்டு அமைப்பும் அன்பளிப்பு பெறும் முன் அரசிடம் அனுமதி பெற வேண்டும் அப்போதைய யுபிஏ அரசிடம் ராஜீவ் காந்தி அறக்கட்டளை இதைத் தெரிவித்ததா?

2008-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது காங்கிரஸ். இதுவரை கட்சிக்கும் கட்சிக்கும் இடையேயான உறவுக்கான அவசியம் என்ன என்பதை காங்கிரஸ் கட்சி விளக்கவில்லை.

பிற அரசியல் கட்சிகளுடன் இப்படி எத்தனைப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காங்கிரஸ் மேற்கொண்டது என்பதை அக்கட்சி விளக்க வேண்டும்” என்று ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்