அரசு இ-மார்க்கெட்பிளேஸ் என்பது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் நடக்கும் நடக்கும் இ-மார்க்கெட் ஆகும். புதிய பொருட்களை இதில் பதிவு செய்யும் போது எந்த நாட்டில் தயாரிக்கபட்டது என்பதைக் குறிப்பிட விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தங்கள் பொருட்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தவர்களும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதை குறிப்பிடுவது அவசியமாகும். தயாரிக்கப்பட்ட நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டால் பொருட்கள் அரசு இ-மார்க்கெட் பிளேசிலிருந்து நீக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்புகளில் உள்நாட்டு பொருட்கள் எத்தனை விகிதம் என்பதையும் குறிப்பிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே போல் இணையதளத்தில் மேக் இன் இந்தியா அம்சமும் செயலாக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 50% இந்திய உள்நாட்டுப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் அதற்கேற்ப தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் மேக் இன் இந்தியாவையும் தற்சார்பையும் வளர்த்தெடுக்க உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago