ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணமடைந்தனர்; 24 மணிநேரத்தில் இந்தியாவில் ஏறக்குறைய 15 ஆயிரம் பேருக்கு கரோனா பாஸிட்டிவ்;14 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு

By பிடிஐ

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 15 ஆயிரம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதேசமயம், 11 ஆயிரம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 312 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு 14 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 189 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஒருலட்சத்து 78 ஆயிரத்து 14 ஆகவும் அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து மீள்வோர் சதவீதம் 56.38 ஆக அதிகரித்துள்ளது

இந்தியாவில் நேற்று நடந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 113 பேரும், டெல்லியில் 58 பேரும், தமிழகத்தில் 37 பேரும், குஜராத்தில் 21 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் 14 பேரும், ஹரியாணாவில் 9 பேரும், ராஜஸ்தான், தெலங்கானாவில் தலா 7 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 6 பேரும், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 5 பேரும், ஜம்மு காஷ்மீரில் 3 பேரும், பிஹார், பஞ்சாபில் 2 பேரும், சத்தீஸ்கர், கோவா, ஒடிசா , உத்தரகாண்டில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 6,283 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,233 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,684 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 794 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 569 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 521 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 569 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 356 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 217 ஆகவும், ஹரியாணாவில் 169 ஆகவும், ஆந்திராவில் 111 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 142 பேரும், பஞ்சாப்பில் 101 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 85 பேரும், பிஹாரில் 55 பேரும், ஒடிசாவில் 15 பேரும், கேரளாவில் 21 பேரும், உத்தரகாண்டில் 28 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 11 பேரும், அசாமில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 8 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 67,796 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள. டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,655 பேராக அதிகரித்துள்ளது. 36,602 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 087 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 34,112 ஆகவும் அதிகரித்துள்ளது.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 27,825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,909 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 15,232 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 12,078 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 18,322 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 14,358 பேரும், ஆந்திராவில் 9,372 பேரும், பஞ்சாப்பில் 4,236 பேரும், தெலங்கானாவில் 8,674 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 6,088 பேர், கர்நாடகாவில் 9,399 பேர், ஹரியாணாவில் 11,025 பேர், பிஹாரில் 7,825 பேர், கேரளாவில் 3,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,749 பேர் குணமடைந்துள்ளனர்

ஒடிசாவில் 5,303 பேர், சண்டிகரில் 411 பேர், ஜார்க்கண்டில் 2,137 பேர், திரிபுராவில் 1,221 பேர், அசாமில் 5,586 பேர், உத்தரகாண்டில் 2,402 பேர், சத்தீஸ்கரில் 2,303 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 727 பேர், லடாக்கில் 847 பேர், நாகாலாந்தில் 280 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 91 பேர், புதுச்சேரியில் 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 149 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 141 பேர், சிக்கிமில் 78 பேர், மணிப்பூரில் 898 பேர், கோவாவில் 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்