பெங்களூருவில் கரோனா பாதித்த பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு

By இரா.வினோத்

பெங்களூருவில் கரோனா வைரஸ்அதிகம் பாதித்த 4 பகுதிகளில் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே 4-ம்தேதி முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட பின்னர் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 9 ஆயிரத்து 399 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 142 பேர் இறந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள‌ உள்விளையாட்டு அரங்கங்கள், கனகபுரா சாலையில் உள்ளரவிசங்கர் குருஜி மடம் ஆகியவற்றில் கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் துஷார் கிரிநாத், பணியாளர் தேர்வாணைய செயலாளர் சத்தியவதி, மினரல் கழக நிறுவன இயக்குனர் நவீன் ராஜ் ஆகியோர் தலைமையில் 3 நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் அளித்த அறிக்கையின்படி பெங்களூருவில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள‌ கலாசிபாளையா, கே.ஆர்.மார்க்கெட், சாம்ராஜ்பேட்,சிக்பேட் ஆகிய 4 இடங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்