திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அற்புத மலைப் பாதைகள்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையானை தரி சிக்க நம் முன்னோர்கள் நடை பயணமாக செல்லும் வகையில் 2 பாதைகளை உருவாக்கினர்.

வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கடந்த நூற்றாண்டில் மேலும் இரு மலைப்பாதைகள் உருவாக்கப்பட்டன. இந்த வாகனப் பாதைகள் உருவான பின்னர் பக்தர்களின் வருகை லட்சக் கணக்கில் உயர்ந்துள்ளது. அற்புத இயற்கை சூழலில் அமைந்துள்ள அனைத்து பாதைகள் வழியாகவும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

முந்தைய காலத்தில் ஏழு மலையான் குடிகொண்டுள்ள திரு மலையை ‘திருவேங்கடம்’ என்றும், சுவாமியை ‘திருவேங்கட முடையான்’ என்று அழைத்து வந்தனர். பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், தெலுங்கு பல்ல வர்கள், விஜய நகர அரசர்கள், ஆங்கிலேயர்கள், ஆர்க்காடு நவாபுகள் மற்றும் மஹந்திக்கள் ஏழுமலையானை தரிசித்து, பக்தர்களுக்காக பல்வேறு வசதி களை செய்துள்ளனர். மேலும், ஆதிசங்கரர், ராமானுஜர், அன்ன மய்யா, புரந்தரதாசர், வெங்கமாம் பாள் போன்ற மகான்களும் சுவாமிக்கு பல சேவைகள் புரிந் துள்ளதாக சாசனம் மூலம் தெரிய வருகிறது. இவர்கள் அனைவரும் நடைபாதையில் 7 மலைகளை கடந்துவந்து ஏழுமலையானை தரிசித்துள்ளனர்.

ஏழுமலையான் குடிகொண் டுள்ள சப்த மலைகள் எனப்படும், சேஷாத்ரி, கருடாத்ரி, நீலாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராய ணாத்ரி மற்றும் வெங்கடாத்ரி மலைகளை கடந்துவந்து சுவாமியை தரிசிக்க வேண்டும். இதில் வெங்கடாத்ரி மலையில்தான் சுவாமி குடி கொண்டுள்ளார்.

அலிபிரி மலைப்பாதை வழியாக வும், சந்திரகிரி அருகே உள்ள வாரி மெட்டு என்ற இடங்கும் தொடங்கும் பாதை வழியாகவும் நடை பயணமாக ஏழுமலையான் கோயிலுக்கு செல்லலாம். இதில் வாரி மெட்டு மலைவழிப் பாதை முற்றிலும் வனப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் மூன்றரை கிலோ மீட்டர் வரை இப்பாதை அமைந்துள்ளதால் விரைவில் இந்த வழியாக திருமலையை அடை யலாம். தற்போது பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இப்பாதை 24 மணி நேரமும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 25 அடிக்கு 2 பாது காவலர்கள் வீதம் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

10.4.1944-ல் வாகனங்கள் செல்லும் முதல் மலைவழிப் பாதைக்கு நடைமுறைக்கு வந்தது. அப்போதைய மதராஸ் ஆளுநர் ஆர்தர் ஹூப் மேற்பார்வையில், புகழ்பெற்ற பொறியாளர் மறைந்த விஸ்வேஸ்வரய்யா திட்டத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. ஒரே மலைப்பாதையில் வாகனங் கள் திருப்பதி-திருமலை இடையே இயக்கப்பட்டன. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வந்தன. இதன் காரணமாக இரண்டாவது வாகனப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1974-ம் ஆண்டு இரண் டாவது வாகனப் பாதை அமைக்கப்பட்டது. தற்போது இந்த வழியே திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாக னங்கள் செல்கின்றன. இதன் மூலம் விபத்துகள் மிகவும் குறைந்துவிட்டன என்று கூறலாம்.

திருமலைக்கான போக்குவரத்து 1975-ம் ஆண்டு ஆந்திர அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது திருப்பதி - திருமலை இடையே தினமும் 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கங்களிலும் 3,200 முறை இயக்கப்படும் இந்தப் பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர்.

1970-ம் ஆண்டு வரை ஏழுமலையானை பக்தர்கள் வெறும் 10 நிமிடத்தில் தரிசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாகனப் பாதைகள் ஏற்பட்ட பின் பக்தர்களின் வருகை லட்சக் கணக்கை எட்டி உள்ளது. தற்போது தினமும் கார், ஜீப், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும், நடை பயணமாகவும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகின் றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்