உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் அரசு சிறுவர் காப்பகத்தில் உள்ள 57 சிறுமிகளுக்கு (மைனர்) கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் 5 சிறுமிகள் கருத்தரிப்பதும் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காப்பகத்துக்கு வரும் முன்னரே இவர்கள் கருத்தரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்த போதும் உ.பி. அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
ஸ்வரூப் நகரில் உள்ள இந்தக் காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கருத்தரித்த 5 சிறுமிகளில் 3 பேர் ராமா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டதாகவும் இருவர் ஹாலெட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மேஜிஸ்ட்ரேட் பிரம்மதேவ் கூறும்போது, “அனைத்து சிறுமிகளும் கோவிட் 19க்கான பிரத்யேக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 மைனர் பெண்கள் கருத்தரித்துள்ளனர். இவர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகள் நல கமிட்டியின் உத்தரவுகளின் பேரில் அழைத்து வரப்பட்டனர், இங்கு அழைத்து வரும்போதே அவர்கள் கருத்தரித்திருந்தனர்” என்றார்.
கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ் குமாரும் இதனை உறுதி செய்தார். காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உ.பி. அரசு உண்மைகளை மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago