காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ஹிஸ்புல் முஜாகிதீன் உட்பட 4 தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக, தீவிரவாத அமைப்புகளால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதை தடுத்து வருகிறோம். தீவிரவாதிகளின் நடமாட்டம் எங்குகாணப்பட்டாலும் உடனடியாகஅவர்களை பிடிக்க காவல்துறையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, அன்சார் கஸ்வாத் – உல் – ஹிந்த் ஆகிய நான்கு தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள், பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். ஏனெனில், ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அழிக்கப்படும்போதுஅந்த ஒட்டுமொத்த இயக்கமே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை குல்ஹாம் பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள்வழங்குவதற்காக வந்த ஆளில்லாவிமானத்தையும் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதிலிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago