ஹரியாணா மாநிலம் கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டை (என்டிஆர்ஐ) சேர்ந்த விஞ்ஞானி விகாஸ் வோரா கூறியதாவது: நெதர்லாந்தின் ஹோல்ஸ்டெயின் பிரைசியான் இனத்தைச் சேர்ந்த ஜோகன் என்ற பசு கர்னாலில் உள்ளது. இது 24 மணி நேரத்தில் 76.61 கிலோ லிட்டர் பால் கொடுத்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கர்னாலில் ஒரு பசு 65 கிலோ, பஞ்சாபில் ஒரு பசு 72 கிலோ பால் கொடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த 2 சாதனைகளையும் இந்த பசு முறியடித்துள்ளது. கர்னாலின் நிலோகேரி பிளாக் கலிப் கேரி கிராமத்தைச் சேர்ந்த பல்தேவ் சிங் என்பவருக்கு சொந்தமான பசு இது.
இந்த பசுவுக்கு 4 வயதாக இருந்தபோது 24 மணி நேரத்தில் 42 கிலோ பால் தந்து சாதனை படைத்தது. தற்போது 76.61 கிலோ லிட்டர் பால் கொடுத்து புதிய சாதனையை படைத்துள்ளது. இங்குள்ள கால்நடைக் கொட்டிலில் உள்ள 70 பசுக்களில் இந்த பசுதான் அதிக அளவில் பால் தருகிறது. இதற்காக பல்வேறு விருதுகளையும் இது வென்றுள்ளது. பஞ்சாபின் பட்டாலாவில் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய வைக்கோல் போட்டி மற்றும் விவசாயக் கண்காட்சியில் இந்த பசு 66.20 கிலோ பால் கொடுத்து சாதனை படைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago