40 ஆண்டுக்கு முன் மாயமாகி 93 வயதில் குடும்பத்துடன் இணைந்த மூதாட்டி

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பஞ்சுபாய். கடந்த 1980-ம் ஆண்டு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரது மகன்கள் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பஞ்சுபாய் காணாமல் போனார். இந்நிலையில், அவர் அங்கு வந்த ஏதோ ஒரு பேருந்தில் ஏறி மத்திய பிரதேசத்துக்கு சென்றுவிட்டார். டமோஹ் என்ற கிராமத்தைச் சேர்ந்த நூர்கான் என்பவர் பஞ்சுபாயை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் பேசும் மராத்தி மொழி அவர்களுக்கு புரியாததால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரத்தை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. நூர்கான் 2007-ம் ஆண்டு இறந்த பிறகும், அவரது குடும்பத்தினர் பஞ்சுபாயை கைவிடவில்லை. 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் அவருக்கு இப்போது 93 வயதாகிறது.

இந்த சூழ்நிலையில், நூர்கானின் மகன் இஸ்ரார், கடந்த மாதம் பஞ்சுபாயிடம் அவரது சொந்த ஊர் குறித்து கேட்டபோது, அவர் பத்ராட் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெயரை கூகுளில் பதிவிட்டபோது அது நாக்பூரில் உள்ள ஒரு கிராமம் எனத் தெரியவந்தது. பஞ்சுபாயின் குடும்பத்தினருக்கு இந்த தகவல் சென்றுவிட்டது. இதனையடுத்து, பஞ்சுபாயின் பேரன் பிரித்விகுமார் ஷிங்லே, கடந்த வியாழக்கிழமை நேரடியாக அங்கு காரில் வந்து தனது பாட்டியை அழைத்துச் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்