இந்திய - சீன எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த ராணுவ அதி காரி சந்தோஷ்பாபுவின் குடும்பத்தின ருக்கு ரூ.5 கோடி நிதி உதவியை தெலங்கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவ், நாளை நேரில் வழங்கு கிறார். சந்தோஷ்பாபுவின் மனை விக்கு அரசு வேலைக்கான நியமன ஆணை, ஹைதராபாத்தில் 600 சதுர அடியில் இலவச வீட்டுமனை பட்டா ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.
மேலும், எல்லை மோதலில் உயி ரிழந்த மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 19 ராணுவ வீரர்களின் குடும்பத்தின ருக்கும் தலா ரூ.10 லட்சத்தை மத்திய அரசு மூலம் தெலங்கானா அரசு விரைவில் வழங்க உள்ளது.
கடந்த மே 5, 6-ம் தேதிகளில் இந்திய – சீன எல்லைப் பகுதியில் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது. அதில் சில வீரர்கள் காயமடைந்தனர். இதை யடுத்து, எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியது. இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, எல்லையில் குவிக்கப்பட்டிருந்த படைகள் பின்வாங்க தொடங்கிய நிலை யில், கடந்த 15-ம் தேதி இரவு இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆணிகள் பதித்த கட்டை கள், இரும்புக் கம்பிகளால் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சிலர் காயமடைந்தனர். சீன தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாயின. இதை, சீனா இதுவரை மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.
10 வீரர்கள் விடுவிப்பு
மேலும், இந்திய வீரர்கள் சிலர் காணாமல் போனதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, எல்லைப் பிரச் சினை மற்றும் மோதல் தொடர்பாக இரு நாடுகளும் மேஜர் ஜெனரல் நிலையில் 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தின. அதில் உடன்பாடு ஏற்பட்ட தால், 15-ம் தேதி நடந்த மோதலின் போது சிறைபிடித்துச் சென்ற 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்களை சீனா நேற்று முன்தினம் விடுவித்தது.
நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த 20 வீரர்களின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டன. அவர்களது உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
வீரமரணம் அடைந்தவர்களில் தெலங்கானா மாநிலம் சூரியாபேட்டை யைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ்பாபுவும் (37) ஒருவர். அவரது உடல் கடந்த புதன்கிழமை இரவு தனி விமானத்தில் ஹைதராபாத் வந்தது. விமான நிலை யத்தில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் சந்தோஷ் பாபுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கார் மூலம் சூரியாபேட்டைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், அரசு, போலீஸ் அதிகாரிகள், திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, காசோரம் என்ற இடத்தில் உள்ள சந்தோஷ்பாபுவின் சொந்த நிலத்தில் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
நிதியுதவி அறிவிப்பு
இதற்கிடையே, கரோனா வைரஸ் பரவல் குறித்து மாநில முதல்வர் களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-ம் தேதி இரவு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பேசும்போது, ‘‘எல்லையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தெலங்கானாவைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ்பாபுவின் குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கப்படும். அவரது மனைவிக்கு குரூப்-1 பிரிவில் அரசு வேலையும் இலவசமாக வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்படும். நாட்டுக்காக உயிர் நீத்த மீதமுள்ள 19 வீரர்களின் தியாகத்தையும் நான் மதிக்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கும் தெலங்கானா அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இதை மத்திய அரசு மூலமாக வழங்குவேன்’’ என கூறினார்.
இந்நிலையில், முதல்வர் சந்திர சேகர ராவ் நாளை சூரியாபேட்டைக்கு சென்று, உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். அப்போது அரசு சார்பில் ரூ.5 கோடிக்கான காசோலையையும் அவர் வழங்க உள்ளார்.
அமைச்சர் ஆறுதல்
கர்னல் சந்தோஷ்பாபுவின் வீட் டுக்கு நேற்று சென்ற தெலங்கானா மாநில அமைச்சர் ஜெகதீஷ்வர் ரெட்டி, கர்னலின் பெற்றோர், அவரது மனைவி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறும் போது, ‘‘முதல்வர் சந்திரசேகர ராவ் திங்கட்கிழமை காலை சூரியா பேட்டை வருகிறார். உங்களை எல் லாம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். ரூ.5 கோடி நிதியுதவியை வழங்குவார். அத்துடன் ஹைதராபாத்தில் 600 சதுர அடியில் வீட்டு மனைப்பட்டாவும் வழங்கப்பட உள்ளது. கர்னலின் மனைவிக்கு குரூப் 1 அரசு அதிகாரிக்கான பணி நியமன ஆணையும் அப்போது வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago