கல்வான் பள்ளத்தாக்கு சீன ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக உளவுத்துறையின் தோல்விதான் காரணமா என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனாவின் எல்லை அத்துமீறலி 20 இந்திய வீரர்கள் பலியானதையடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இதில் கலந்து கொண்ட சோனியா காந்தி இத்தகைய குற்றச்சாட்டை எழுப்பினார்.
இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி தொடர் கேள்விகளை எழுப்பினார், அதில் உளவுத்துறை தோல்வியினால் நாம் உயிரிழப்புகளை சந்திக்க நேர்ந்ததோ என்றும் சீன ஊடுருவல் குறித்து சீனத் தலைமையிடம் உயர்மட்ட அரசியல், ராஜிய மட்டத்தில் விவகாரத்தைக் கொண்டு செல்ல தாமதத்தினால்தானோ என்றும் கேள்வி எழுப்பினார்.
“லடாக்கில் சீன துருப்புக்கள் எந்த தேதியில் ஊடுருவினர். நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததை நம் அரசு எப்போது கண்டுப்பிடித்தது. அது மே 5ம் தேதிதானா, அல்லது அதற்கு முன்னரேவா? நம் நாட்டின் எல்லைகள் பற்றிய செயற்கைக் கோள் படங்கள் அரசுக்கு சீரான முறையில் வந்து கொண்டிருக்கின்றனவா?
» எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவவில்லை; நமது பகுதியையும் கைப்பற்றவில்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்
இப்போதைய கேள்வி என்னவெனில், அடுத்து என்ன? அடுத்த கட்ட நடவடிக்கைக்கான வழி என்ன? என்பதே. சீனா தனது நிலைக்கு மீண்டும் திரும்பிச் செல்வதை உறுதி செய்ய முடியுமா? இந்த ஊடுருவலுக்கு முந்தைய நிலைமை தக்கவைக்கப்படுமா என்பதே நாட்டு மக்கள் முன்னால் உள்ள கேள்வி.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சீனா தாமதமாகக் கூட்டியது வருத்தமே, சீனாவை எதிர்கொள்வதில் எப்போதும் முழு ஒத்துழைப்பு நல்குவோம்” என்று பேசினார் சோனியா காந்தி.
முக்கிய செய்திகள்
இந்தியா
54 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago