தனியார் பள்ளி கட்டண உயர்வுக்கு தடை விதிக்க அவசர சட்டம்: உத்தரபிரதேச ஆளுநர் ஒப்புதல்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கரோனாவைரஸ் பரவல் காலத்தில் பொதுமக்களுக்கு சாதகமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் சுயநிதி தனியார் பள்ளிகள் கட்டணம் மீதான சட்டத்தில் திருத்தம் செய்துள்ளார்.

பெரும்பாலான தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவற்றை இந்த வருடம் உயர்த்தியதே இதற்குக் காரணம். மேலும், கல்விக்கட்டணம் நிலுவையில் வைத்திருக்கும் மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவது போன்றகடுமையான முடிவுகளையும் தனியார் பள்ளிகள் எடுக்கத் தொடங்கின.

கரோனா பரவல் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் எடுப்பது சரியல்ல எனக் கூறிய அரசு,தனியார் பள்ளிகளின் புதிய நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சுயநிதி தனியார் பள்ளிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழியையும் தடுக்கும் வகையில் உத்தரபிரதேச அரசு தனியார் பள்ளிகளுக்கான சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து அவசர சட்டமாக அமலாக்கியது. இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் அனந்திபென் பட்டேல் நேற்று ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து சுயநிதி தனியார் பள்ளிகள் இனி அரசின் அனுமதியின்றி அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்தமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தில் சுயநிதி பள்ளிகள் கட்டணங்களை உயர்த்த, மாவட்ட அளவில் அரசுஅமைத்த ஒழுங்குமுறை நடவடிக்கைக் குழுவிடம் முதலில் அனுமதி பெற வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்