ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில சுகாதார அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கரோனா தொற்று இருப்பது தெரியவரவில்லை, நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் 2வது டெஸ்ட்டில் அவருக்கு கரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
55 வயதான ஜெய்னுக்கு உடனே கரோனா பரிசோதனைகளுக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பிய போது முடிவு நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் இன்று அவருக்கு பாசிட்டிவ் உறுதியானது.
இதனையடுத்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “மக்களுக்காக உங்கள் ஆரோக்கியத்தையும் பார்க்காமல் 24 மணிநேரமும் உழைத்தீர்கள், விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்
புதன் ஆன இன்று டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கல்காஜி ஆதிஷிக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago