வாரணாசியில் மோடி விநியோகிக்கும் ரிக்‌ஷாக்களால் சர்ச்சை

By ஆர்.ஷபிமுன்னா

வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்தர மோடி இலவசமாக 501 ரிக்க்ஷாக்களை விநியோகம் செய்ய இருப்பது சர்ச்சையாகி உள்ளது. இது பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து செய்யப்படுவதாக புகார் கிளம்பியுள்ளது.

முதன்முறையாக மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றவர் மோடி. இவர் தம் தொகுதிக்கு வரும் வெள்ளிக்கிழமை வருகை புரிய இருக்கிறார்.

அப்போது, 501 பேருக்கு சைக்கிள் ரிக்க்ஷா, 101 பேருக்கு எலக்ரானிக் ரிக்க்ஷா மற்றும் 1000 பேருக்கு சூரிய ஒளியில் ஒளிதரும் விளக்குகள் உட்படப் பல்வேறு நிவாரண உதவிகள் அளிக்க இருக்கிறார்.

இதை பெருபவர்களில் பெரும்பாலோனோர் வாரணாசியின் மிக அருகிலுள்ள பிஹாரை சேர்ந்தவர்கள் என்பதால் அதன் மீது சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது குறித்து 'தி இந்து'விடம் பிஹார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், 'உபி, டெல்லி ஆகிய நகரங்களில் ரிக்‌ஷா ஓட்டிப் பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் வாரணசியில் இருப்போருக்கு சைக்கிள் மற்றும் எலக்ட்ரானிக் ரிக்‌ஷாக்களை இலவசமாக அளிப்பதன் மூலம் தம் கட்சிக்கு பிஹாரில் அனுதாப வாக்குகள் பெறலாம் எனக் மோடி கருதுகிறார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க நம் தலைமை ஆலோசனை செய்து வருகிறது' எனத் தெரிவித்தனர்.

பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு அக்டோபர் 12-ல் துவங்கி நவம்பர் 5 வரை என ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் இறுதி முடிவு நவம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதை ஒட்டி அம் மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தம் பிரச்சாரங்களை துவங்கி விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்