கரோனா ஒழிய தன்வந்திரி யாகம் நடத்திய கர்நாடக முதல்வர் எடியூரப்பா

By செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவிலும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் உள்ள சங்கர மடத்தில் கரோனா வைரஸ் ஒழிய மகா தன்வந்திரி யாகம் நடத்தினார். சிருங்கேரியை சேர்ந்த புரோகிதர்கள் மந்திரங்களை ஓத எடியூரப்பா பூக்களை தூவியும், தீபாராதனை காட்டியும் வேண்டிக் கொண்டார். இதுகுறித்து புரோகிதர்கள் கூறுகையில், “உலகத்தைக் காக்கவும், உலக நன்மைக்காகவும், கரோனா வைரஸ் ஒழியவும் இந்த மகா தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கரோனா கொள்ளை நோய் ஒழிந்து உலகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் நன்மை உண்டாகும். எடியூரப்பாவுக்கு ஆன்மீக நம்பிக்கை இருப்பதால் அவர் பங்கேற்றார்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்