368 உதவியாளருக்கு 23 லட்சம் பேர் மனு செய்த விவகாரம்: தேர்வு முறைகளில் உ.பி. அரசு மாற்றம்

By ஆர்.ஷபிமுன்னா

உபியின் தலைமை செயலகத்தில் 368 அலுவலக உதவியாளர்களுக்கு 23 லட்சம் பேர் மனு செய்ததால் அதன் தேர்வு முறையில் மாற்றம் செய்கிறது மாநில அரசு.

கடந்த செப்டம்பரில் உ.பி. மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள 368 உதவியாளர் பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் ஆன்லைனில் மனு செய்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த 23 லட்சம் பேரில் 2 லட்சம் விண்ணப்பதாரர்கள் குறைந்தது பி.டெக், பி.எஸ்.சி, எம்.எஸ்.சி மற்றும் எம்.காம் பட்டம் பெற்றவர்கள். 255 விண்ணப்பதாரர்கள் பி.எச்.டி முடித்தவர்கள்.

இந்நிலையில், இது குறித்து உபியின் தலைமை செயலக நிர்வாக அதிகாரியான பிரபாத் மித்தல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த 368 பதவிக்கு எதிர்பாராத வகையில் 23 லட்சத்திற்கும் அதிகமாக மனு செய்தவர்களுக்கு தற்போதுள்ள முறைப்படி தேர்வு செய்ய நான்கு வருடங்கள் பிடிக்கும்.

எனவே, இதற்கான தேர்விற்காக புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் கூறி அரசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக, புதிய தேர்வு முறையை அறிமுகப்படுத்த நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெறலாம்.’ எனத் தெரிவித்தார்.

சுமார் 12 வருடங்களுக்கு பின் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளரின் ஒரு பதவிக்கு சுமார் 6200 பேர் மனுச் செய்துள்ளனர். இந்த 23 லட்சம் பேர்களில் 255 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். 2 லட்சம் பட்டப்படிப்பு முடித்தவர்கள், 78 பேர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் ஆவர். இதில் கேட்கப்பட்ட தகுதியான ஐந்தாம் வகுப்பு தேர்ச்சியை பெற்று 53,426 பேர் மனுச் செய்துள்ளனர். 3797 ஆறாம் வகுப்பு, 3964 பேர் ஏழாம் வகுப்பு மற்றும் 11,21,059 பேர் 10 ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான ஊதியம் 5,200-20,200 ஆகும். வயது வரம்பு 18 முதல் 40 ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்