பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒரு மாதம் ஊரடங்கை அமல் படுத்தினால் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்று 74 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து ‘லோக்கல் சர்கிள்ஸ்’ நிறுவனம், மக்களிடையே கருத் துக் கணிப்பை நடத்தி வருகிறது. கடந்த மே 3-ம் தேதி இந்த நிறு வனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 74 சதவீதம் பேர் ஊரடங்கை அமல்படுத்த ஆதரவு தெரிவித்தனர். மே 12-ம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேரும் மே 28-ம் தேதி நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 72 சதவீதம் பேரும் ஊரடங்கை ஆதரித்தனர்.
இதைத் தொடர்ந்து 'லோக்கல் சர்கிள்ஸ்' சார்பில் அண்மையில் மீண்டும் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது நாடு முழுவதும் 221 மாவட்டங்களைச் சேர்ந்த 46 ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
‘கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, டெல்லி, சென்னை, செங்கல்பட்டு, ஹைதராபாத், அகமதாபாத், தாணே, புனே, இந்தூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், சூரத், அவுரங்காபாத், ஜோத்பூர், குருகிராம் ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு மாதம் ஊரடங்கை அமல்படுத்தினால் வைரஸ் பரலை கட்டுப்படுத்தலாம்’ என்று 74 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்தனர். 22 சதவீதம் பேர் ஊரடங்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 4 சதவீதம் பேர் கருத்து கூற விரும்பவில்லை.
இந்த 15 மாவட்டங்களின் மக்களிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்டறியப்பட்டன. இதில் டெல்லி மக்களில் 79 சதவீதம் பேரும், மும்பையில் 64 சதவீதம் பேரும், சென்னையில் 61 சதவீதம் பேரும் ஊரடங்கை அமல்படுத்த ஆதரவு தெரிவித்தனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா வைரஸ் நோயாளிகள் வசிக்கும் இதர மாவட்டங்களில் வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று 'லோக்கல் சர்கிள்ஸ்' தரப்பில் மக்களிடம் கேட்கப்பட்டது. அப்போது 59 சதவீதம் பேர், பகுதியளவு ஊரடங்கையும் 23 சதவீதம் பேர் முழு ஊரடங்கையும் அமல்படுத்த யோசனை கூறினர். 14 சதவீதம் பேர் ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 4 சதவீதம் பேர் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதன்படி, ஒட்டுமொத்தமாக 82 சதவீதம் பேர் ஊரடங்குக்கு ஆதரவு அளித்திருப்பதாக ‘லோக் கல் சர்கிள்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago