இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச் அமைப்பு; இணையவழி விநியோகம்: தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

நாட்டின் முதலாவது இணையவழி விநியோகம் அடைப்படையிலான எரிவாயு வர்த்தக அமைப்பான இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச் அமைப்பை தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

இணையவழி விநியோகம் அடைப்படையிலான நாட்டின் முதலாவது எரிவாயு வர்த்தக அமைப்பான இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச் அமைப்பை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலிக்காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

இந்திய எரிவாயு வர்த்தக அமைப்பு விநியோகம் அடைப்படையிலான இயற்கை எரிவாயு விநியோகத்திற்கான வர்த்தக அமைப்பாகும். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த அமைப்பு தனது வர்த்தகத்தைத் தொடங்கியது. முற்றிலும், இந்திய எரிசக்தி வர்த்தக அமைப்பிற்குச் சொந்தமான இந்த புதிய அமைப்பு (இந்தியன் கேஸ் எக்ஸ்சேஞ்ச்) தரப்படுத்தப்பட்ட எரிவாயு ஒப்பந்தங்களில் சந்தை பங்கேற்பாளர்கள் வர்த்தகம் செய்ய வழிவகை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புதிய அமைப்பு, இணைய அடிப்படையில் முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்டிருப்பதுடன், வாடிக்கையைளர்களுக்கு தடையற்ற வர்த்தக அனுபவத்தை வழங்கும்.

நிகழ்ச்சியில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இயற்கை எரிவாயு வர்த்தகத்திற்கென புதிய மின்னணு அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், இந்தியாவின் எரிசக்தி வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கப்பட்டிருப்பதோடு, இந்த நாடு இயற்கை எரிவாயு சந்தையில் சுதந்திரமாக விலை நிர்ணயம் செய்யவும் வழிவகுத்துள்ளதாகக் கூறினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புதிய அமைப்பை தொடங்கியிருப்பதன் மூலம், இந்தியா முன்னணி பொருளாதார நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளததாகவும் அவர் தெரிவித்தார். சந்தை நிலவரம் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதன் மூலம், இந்திய எரிவாயு வர்த்தக அமைப்பு, எரிவாயு விற்பனைக்கான சுதந்திரமான சந்தை ஒன்றை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கை எரிவாயு, நாடு முழுவதும் கிடைக்கும் வகையில், கட்டணத்தை சீரமைப்பதற்கான பணியில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எரிவாயு வர்த்தகத்தில் அரசின் தலையீட்டிற்கு இடமிருக்காது என்றும், நுகர்வோரே, சுதந்திரமான சந்தையின் எஜமானர் போன்று திகழ்வார்கள் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

500 எம்.எம்.டி. திரவ எரிவாயு முனையத் திறன் கொண்ட நாடாக இந்தியா வரைவில் திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார். கத்தார், ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுடன், இந்திய நீண்டகால எரிவாயு ஒப்பந்தங்களை செய்து கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ரஷ்யா, மொசாம்பிக் மற்றும் சில நாடுகளில் இந்தியா முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

உர்ஜா கங்கா, கிழக்கிந்திய எரிவாயுத் தொகுப்பு, வடகிழக்கு மாநிலங்களில் இந்திரதனுஷ் திட்டம், தம்ரா -தாஹேஜ் எரிவாயுக்குழாய், நிலக்கரிப்படுகை எரிவாயு மற்றும் நிலக்கரிப்படுகை மீத்தேன் கொள்கை போன்ற திட்டங்களின் மூலம், நாட்டில் எரிவாயு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அடுத்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் 30,000 கிலோமீட்டர் தொலைவுக்கு எரிவாயுக்குழாய் பதிக்கப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்