கடந்த 24 மணி நேரத்தில் 8,049 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் விகிதம் 50 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மொத்தம் 1,62,378 நோயாளிகள் இதுவரை கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது, குணமடைந்தோர் விகிதம் 50.60 சதவீதமாக உள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் பாதி பேர் குணமடைவதையே இது காட்டுகிறது. உரிய நேர தொற்றுக் கண்டறிதல், முறையான மருத்துவ சிகிச்சை மேலாண்மை ஆகியவை நோயாளிகள் குணமடைவதற்குக் காரணமாகும்.
தற்போது, 1,49,348 பேர் மருத்துவக் கணிகாணிப்பின் கீழ் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தொற்று கண்டறிவதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) சோதனைத் திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 646 ஆகவும், தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 247 ஆகவும் (மொத்தம் 893) அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,51,432 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 56,58,614 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago