கரோனா லாக்டவுன் முட்டாள்தனம்; மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸை பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனின் வரைபடத்தை வெளியிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு செயல்படுத்திய 4 கட்ட லாக்டவுனின் வரைபடத்தையும் வெளியிட்டு ஒவ்வொரு வரைபடத்திலும், கரோனா பாதிப்பு ஒவ்வொரு லாக்டவுனிலும் எவ்வாறு உயர்ந்து வந்தது என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படங்கள் அமைந்துள்ளன.

இந்த வரைபடத்தில் முதல் கட்ட லாக்டவுனில் கரோனா பாதிப்பு 0 முதல் 7,500 எட்டுவதற்கு 20 நாட்களுக்கும் மேல் எடுத்துக்கொண்டது. ஆனால், 2-வது கட்ட லாக்டவுனில் கரோனா பாதிப்பு சற்று தாழ்ந்து மேலே எழும்புவதும், 3-வது கட்ட லாக்டவுன் வரைபடத்தில் வளைகோடு நேராக மேலே உயர்வும், 4-வது லாக்டவுன் வரைபடத்தில் கரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்ததை வரைபடத்தில் வரைகோடு உணர்த்துகிறது.

கடந்த வாரம் இதேபோல ஒரு வரைபடத்தை வெளியிட்ட ராகுல் காந்தி லாக்டவுன் தோல்வி அடைந்துவிட்டது என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்த வரைபடத்தில் ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் லாக்டவுனை எவ்வாறு நடைமுறைப்படுத்தி கரோனா பாதிப்பைக் குறைத்தன, மத்திய அரசு எவ்வாறு கையாண்டது என்பதை ராகுல் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் இன்று 3 லட்சத்தை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்தி இந்தப் படத்தை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் இந்த வரைபடத்தை வெளியிட்ட ராகுல் காந்தி அதில் குறிப்பிடுகையில், “வெவ்வேறுவிதமான முடிவுகளை எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தைச் செய்வது பைத்தியக்காரத்தனம்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்