இந்தியாவில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது: இதுவரையில்லாமல் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாஸிட்டிவ்; மகாராஷ்டிராவில் ஒரு லட்சம் பேர் 

By பிடிஐ

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது, இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 386 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இதன் மூலம் இந்தியாவில் கரோனாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 329 பேர் குணமடைந்துள்ளனர், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர் சிகிச்சையில் உள்ளனர்..

மகாராஷ்டிராவில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மூன்றில் ஒரு பகுதி மகாராஷ்டிராவில் உள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 386 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியோனார் எண்ணிக்கை 8 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 127 பேரும், டெல்லியில் 129 பேரும் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் 30 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 20 பேரும், தமிழகத்தில் 18 பேரும், மேற்கு வங்கம், தெலங்கானா, மத்தியப்பிரதேசத்தில் தலா 9 பேரும், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 7 பேரும், ஹரியாணா, உத்தரகாண்டில் தலா 6 பேரும், பஞ்சாபில் 4 பேரும், அசாமில் 2 பேரும், கேரளா, ஜம்மு காஷ்மீர், ஒடிசாவில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,717 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,415 ஆகவும், டெல்லியில் உயிரிழப்பு 1,214 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 440 ஆகவும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 451 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 272 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 174 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 365 ஆகவும், ஆந்திராவில் 80 ஆகவும் இருக்கிறது.
கர்நாடகாவில் 79 பேரும், பஞ்சாப்பில் 63 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 53 பேரும், ஹரியாணாவில் 70 பேரும், பிஹாரில் 36 பேரும், ஒடிசாவில் 10 பேரும், கேரளாவில் 19 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 பேரும், ஜார்க்கண்டில் 8 பேரும், உத்தரகாண்டில் 15 பேரும், அசாமில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் இருவர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 47,796 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 698 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 22,047 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 36,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,398 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 22,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,493 பேர் குணமடைந்தனர்
ராஜஸ்தானில் 12,068 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 10,443 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 12,616 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 10,244 பேரும், ஆந்திராவில் 5,680 பேரும், பஞ்சாப்பில் 2,986 பேரும், தெலங்கானாவில் 4,484 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 4,730 பேர், கர்நாடகாவில் 6,516 பேர், ஹரியாணாவில் 6,334 பேர், பிஹாரில் 6,103 பேர், கேரளாவில் 2,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,000 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 3,498 பேர், சண்டிகரில் 384 பேர் , ஜார்க்கண்டில் 1,627 பேர், திரிபுராவில் 961 பேர், அசாமில் 3,498 பேர், உத்தரகாண்டில் 1,724 பேர், சத்தீஸ்கரில் 1,429 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 470பேர், லடாக்கில் 135 பேர், நாகாலாந்தில் 156 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 67 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 104 பேர், சிக்கிமில் 63 பேர், மணிப்பூரில் 385 பேர், கோவாவில் 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 67 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்