கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தவறான பந்தையத்தில் வெற்றிபெறுவதற்காக தேசம் பயணக்கிறது என்று மத்திய அரசை காட்டமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 2 லட்சத்து 97 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 842 ஆகவும், குணமடைந்து சென்றோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 195 ஆகவும் உயர்ந்துள்ளது. கரோனாவால் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498 ஆக அதிகரித்துள்ளது
வேர்ல்டோ மீட்டர், ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழம் ஆகியவற்றின் கணக்கின்படி, உலகளவில் கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 5-வது இடத்திலிருந்த இந்தியா, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு நகர்ந்தது.
கரோனாவுக்கு மோசமாக இந்தியா இலக்காகி வருவதை சுட்டிக்காட்டியும், மத்திய அரசை விமர்சித்தும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ தவறான பந்தையத்தில் வெற்றி பெறும்பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. ஆணவம் மற்றும் திறமையின்மையின் கலவையின் விளைவாக ஏற்பட்ட ஒரு பயங்கரமான சோக நிகழ்வு” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 4-வது இடத்துக்கு இந்தியா நகர்ந்துள்ளதை சுட்டிகாட்டும் வரைபடத்தையும் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
15 hours ago