அரசு அலுவலகத்தின் முன் திடீரென விழுந்து உயிரிழந்தவரின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் ஏற்றிச் சென்ற விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி உத்தரப்பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணையம் ஆகியவைநோட்டீஸ் அனுப்பியுள்ளன.
உத்தரப்பிரதேசம், பல்ராம்பூர் மாவட்டம் உத்ராவுலா நகரில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் முன் அன்வர் அலி(வயது42) என்பவர் கடந்த புதன்கிழமை முன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இவருக்கு கரோனா வந்திருக்குமோ என அஞ்சி அவரின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் குப்பைபோடு குப்பையாக நகராட்சி ஊழியர்கள் 4 பேர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் 3 போலீஸார் மேற்பார்வையில்தான் நடந்தது.
இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானதையடுத்து நகராட்சி ஊழியர்கள் 4 பேர், போலீஸார் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊடகங்களில் இந்த செய்தியைப் பார்த்த தேசிய மனித உரிமை ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணையம் உத்தரப்பிரதேச அரசு, பல்ராம்பூர் நகராட்சி ஆணையர், உ.பி. போலீ்ஸ் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
» மருந்து வாங்கியதில் ரூ.150 கோடி முறைகேடு- ஆந்திர முன்னாள் அமைச்சர் அச்சன் நாயுடு கைது
» தேசிய கட்டுமான வளர்ச்சி கவுன்சில் சார்பில் உத்தரபிரதேசத்தில் 2.85 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை
தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் “ சாலையில் திடீரென விழுந்து உயிரிழப்போரின் உடலை எவ்வாறு மரியாதையாக எடுத்துச்செல்ல வேண்டும், அல்லது உடல்நலமில்லமல் சாலையில் விழுவோருக்கு எவ்வாறு மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து நகராட்சிகளுக்கும் தலைமைச் செயலாளர் விரிவான வழிகாட்டல் வழிமுறைகளை தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்.
சாலையில் ஒருவர் விழுந்து உயிரிழந்தபின் அவரின் உடலை நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியளித்து. அரசுஊழியர்களிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இது எங்களுக்கு வெட்கமாகவும்,மனித நேயமற்ற முறையிலும் இருந்தது. உயிரிழந்தவர் உடலை எப்போதும் மனிதநேயத்துடன்,மரியாதையாக நடத்த வேண்டும். நகராட்சி ஊழியர்களும், போலீஸாரும் நடந்து கொண்ட முறை நாகரீகமான சமூகத்தில் ஏற்க முடியாதது.
அவர்கள் கடமையை செய்ய மட்டும் தவறவில்லை, கொடூரத்தின் உச்சத்தைக் கடந்து செயல்பட்டு தீவிரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார்கள். கரோனாவில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இறந்தவர்களி்ன் உறவினர்களுக்குத் தேவையற்ற இடையூறை அளிக்காமல் இருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கையை பல்ராம்பூர் நகராட்சிஆணையர், தலைமைச் செயலாளர் , போலீஸ் டிஜிபி ஆகியோர் 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது
உத்தரப்பிரதேச சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் குன்வர் ஹெய்தர் வெளியிட்ட அறிக்கையில் “ பர்ராம்பூர் நகராட்சியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்இறந்தபின் அவரின் உடலை குப்பை வண்டியில் நகராட்சிஊழியர்கள் ஏற்றிச் சென்றதும், அதை போலீஸார் வேடிக்கை பார்த்ததும் வெட்கக்கேடு, மனிதநேயமற்ற தன்மையின் உச்சகட்டம். மனித குலத்துக்கே அவமானம்.
இந்த விவகாரத்தில் பல்ரம்பூர் நகராட்சி, மாவட்டநிர்வாகம் வரும் 15-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago