மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக குதிரை பேரம் ஈடேறாது; கெலாட் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

பாஜகவின் குதிரை பேரம் முடியாததால் 2 மாதங்களுக்கு முன்பு நடக்க வேண்டிய மாநிலங்களவைத் தேர்தல் தற்போது நடைபெறுகிறது, ஆனால் பாஜகவின் எண்ணம் ஈடேறாது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார்.

மேலும், மாநிலங்களவைத் தேர்தல் நடைெபறஇருக்கும் வேளையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்தநிலையில் அசோக் கெலாட் கூறுகையில் ‘‘மாநிலங்களவைத் தேர்தல் 2 மாதங்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டது. பாஜகவின் குதிரை பேரம் முடியாததால் அப்போது ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பாஜகவின் எண்ணம் ஈடேறாது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர்’’ எனக் கூறினார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்