ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி யால் உத்தரபிரதேசத்தின் தர் காவை சுத்தம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில் ஆலா ஹசரத் தர்கா அமைந்துள்ளது. கரோனா பரவலால் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் வழிபாட்டுத்தலங்களுக்கு சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வழிபாட்டுத் தலங் களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இந்நிலையில், பரேலி தர்காவில் ஆல்கஹால் கலந்த கிருமிநாசினி தெளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆலா ஹசரத் தர்கா வின் தலைமை இமாம் முப்தி நஷ் தர் பரூக்கீ கூறும்போது, "போதை தரும் ஆல்கஹாலை பயன் படுத்த இஸ்லாத்தில் தடை உள் ளது. எனவே ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்பட்ட கிருமிநாசினி களை முஸ்லிம்கள் பயன்படுத்தக் கூடாது. இதை நன்கு அறிந்த பின் மசூதி, தர்காக்களில் பயன்படுத்து வது இஸ்லாத்தில் குற்றமாகும். எனவே, ஆல்கஹால் கலக்காத கிருமிநாசினிகளை பயன்படுத்து மாறு கோரியுள்ளேன்" என்றார்.
இதுபோல, வழிபாட்டுத்தலங் களில் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்த அனுமதி மறுப்பது முதன்முறையல்ல. இதற்கு முன்பு, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலின் மா வைஷ் ணோவதம் நவ் துர்கா கோயிலின் தலைமை பண்டிதரான சந்திரசேகர் திவாரி கிருமிநாசினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, உ.பி.யின் தெய் வீக நகரமான மதுராவின் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோயில்களான இஸ்கான், பாங்கே பிஹாரி உள் ளிட்டவற்றிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனவே, இந்த வழி பாட்டுத்தலங்களில் ஆல்கஹால் கலக்காத கிருமிநாசினி பயன் பாடு தொடங்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago