சாலையில் இறந்த 42 வயது மனிதர் ஒருவரின் உடலை குப்பை வண்டியில் பின்புறம் தூக்கிப் போட்டுக் கொண்டு காவல்நிலையம் கொண்டு சென்ற கொடூரமான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் போலீஸார் முன்னிலையிலேயே நடந்தேறியது.
இது தொடர்பாக மொபைல் போனில் பிடிக்கப்பட்ட வீடியோவில் 3 மாநகராட்சி ஊழியர்கள் உடலைக் கட்டி குப்பை போல் குப்பை வண்டியின் பின்புறத்தில் குப்பை போல் தூக்கிப் போட்ட காட்சி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது குறித்து தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் லக்னோவுக்கு 160 கிமீ தொலைவில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் நடந்தது. இதனையடுத்து 4 மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் இதனை வேடிக்கைப் பார்த்த 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இறந்த மனிதர் பெயர் மொகமது அன்வர். இவர் பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அரசு அலுவலகத்துக்குச் சென்ற போது மயங்கி விழுந்தார். அவர் உடனேயே இறந்தும் போய்விட்டார். இவரது உடலுக்கு அருகே தண்ணீர் பாட்டில் ஒன்று இருந்ததை வீடியோ தெரிவிக்கிறது. இவரது உடல் அருகில் போலீஸார் நிற்கின்றனர், குப்பை வண்டியும் நிற்கிறது.
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: திருவிழா ரத்து: கேரள அரசு அறிவிப்பு
» கரோனா வைரஸ் சிக்கலை தற்சார்பு இந்தியாவுக்கான வாய்ப்பாக உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
மாநகராட்சி ஊழியர்கள் மொகமது அன்வர் உடலை குப்பை வண்டிக்குள் தூக்கிப் போட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
பல்ராம்பூர் போலீஸ் அதிகாரி இந்தசெயலை வன்மையாக கண்டித்துள்ளார், மனிதநேயமற்ற செயல், உணர்வற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago