பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா அன்று மெய்நிகர் பேரணியில் மேற்கு வங்க அரசையும் முதல்வர் மம்தா பானர்ஜியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதில் மம்தா புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் ரயில்களை கரோனா எக்ஸ்பிரஸ் என்று வர்ணித்ததாக அமித் ஷா குறிப்பிட்டார். மேலும் இப்படிக் கூறுபவரை, சிஏஏவை எதிர்ப்பவரை மக்கள் தேர்தலில் அரசியல் அகதியாக்குவார்கள் என்று காட்டமாகப் பேசினார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் ரயிலை தான் கரோனா எக்ஸ்பிரஸ் என்று ஒரு போதும் வர்ணிக்கவில்லை என்று மறுத்துள்ளார் மம்தா.
இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘11 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெய்ர்ந்தோர் மேற்கு வங்கத்துக்கு வந்துள்ளனர். புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலை நான் ஒருபோதும் கரோனா ரயில் என்று அழைக்கவில்லை. சாமானிய மக்கள்தான் அந்த ரயிலுக்கு அந்தப் பெயரை சூட்டினர்.’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago