சென்னை உள்பட 6 முக்கிய நகரங்களில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு உதவ மத்தியக் குழு வருகை

By பிடிஐ


சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையினருக்கு உதவ மத்திய சுகாதாரக்குழுவை நியமித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை. அடுத்த ஒருவாரத்தில் இந்த குழுவினர் அந்த 6 நகரத்துக்கும் செல்ல உள்ளன.

சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய 6 நகரங்கள்தான் நாட்டில் உள்ள கரோனா நோயாளிகளில் 60 சதவீதத்துக்குமேல் கொண்டுள்ள என்பதால், அதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மத்திய சுகாதாத்துறையினரால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவினர் மாநில சுகாதார்துறை அதிகாரிகளுக்குத் தேவையான உதவிகளையும், மருத்துவ ஆலோசனைகள், நோய்தொற்றைக் கட்டுப்படுத்துவது, பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகளில் உதவியாக இருந்து ஆலோசனை வழங்குவார்கள்.

மேலும், நாள்தோறும் கரோனா தொற்று எண்ணிக்கை, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து நாள்தோறும் அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார்கள். அடுத்த ஒருவாரத்துக்குள் இந்த 6 பெருநநகரங்களுக்கும் இந்த குழுவினர் செல்ல உள்ளனர்.

மும்பையில் மட்டும் கரோனா நோயாளிகள் எண்ணி்க்கை 51 ஆயிரம், டெல்லியில் 31 ஆயிரம், அகமதாபாத்தில் 15 ஆயிரம், சென்னையில் 22 ஆயிரம் என நாள்தோறும் அதிகரித்து வருவதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 15 மாநிலங்களில் உள்ள 50 மாவட்டங்கள், நகராட்சிகளில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தனியாக உயர்மட்ட மருத்துவச் சிறப்புக் குழுவை அனுப்பி வைக்கவும் மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இந்த குழுவினர் மாநில சுகதாரத்துறையினருக்கு உதவியாகவும், நகராட்சி மருத்துவ அதிகாரிகளுடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா பரவலைக் குறைக்கும் முயற்சியில் தேவையான ஆலோசனைகளிலும், பணிகளிலும் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

இந்தியா

2 days ago

மேலும்