கரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்
பாஜக சார்பில் நடந்த ஜன் சம்வாத் காணொலி பேரணியில் நாக்பூரில் இருந்தவாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாஜக தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
கரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் பொருளதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஏறக்குறைய ரூ.10லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படு்ம் என எதிர்பார்க்கிறோம். பல மாநில அரசுகளிடம் அடுத்த மாதம் ஊதியம் கொடுப்பதற்கு பணம் இல்லாத சூழல்தான் நிலவுகிறது. ஆனாலும், இந்த சூழலை அரசு திறம்படக் கையாண்டு வருகிறது
கடந்த 55 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யமுடியாத விஷயங்கள், செயல்கள் அனைத்தையும் நரேந்திர மோடி அரசாங்கம் கடந்த 5ஆண்டுகளில் செய்துள்ளது. பொருளாதாரப் போர் தொடங்கியுள்ளது. நம்முடைய கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் கரோனாவால் சிக்கலில் இருக்கின்றன, மிகப்பெரிய சிரமத்தையும், துன்பத்தையும் சந்திக்கிறார்கள்.
இந்திய அரசின் வருவாயும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.200 லட்சம் கோடி ஜிடிபி கொண்ட நம்நாட்டில் பொருளாதாரத்தை மீட்க ரூ20 லட்சம் கோடி அளவுக்கு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பொருளதாார சிறப்புத்திட்டத்தை அறிவித்துள்ளோம்.
ரூ200 லட்சம் கோடி ஜிடிபில் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்றால் நினைத்துப்பாருங்கள் மத்திய அரசு இக்கட்டான சூழலைத்தான் எதிர்கொண்டு வருகிறது.
அனைவரும் கடினமான காலத்தை எதிர்கொண்டு வருகிறோம், சிக்கலைச் சந்தித்து வருகிறோம். இந்த துன்பத்தை, சி்்க்கலை நாம் எதிர்மறையாகவோ, வெறுப்புடனோ, அச்சத்துடனோ எதிர்நோக்க முடியாது. கரோனா வைரஸை தன்னம்பிக்கையுடனும், நேர்மறை சிந்தனையுடனும் எதிர்கொள்கிறோம்.
கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். அதுவரை நாம் கரோனாவுடன் போராட வேண்டியது இருக்கும். தேசியவாதம் என்பது பாஜகவின் முன்னுரிமை, சித்தாந்தம். இந்த விஷயத்தை முன்னிறுத்திதான் மாவோயிஸ்ட்களையும், தீவிரவாதிகளையும் மோடி அரசு அணுகுகிறது, இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறது.
முதல்முறையாக மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தபோது, மாவோயிஸ்ட்களையும், தீவிரவாதிகளையும் துணிச்சலுடன் அடக்கியது இதற்கு முன் வந்த அரசுகளால் அதைச் செய்யமுடியவில்லை.
காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து, ராமர் கோயில் கட்டுவதற்கு தடைகளை அகற்றியது என மோடி அரசின் சாதனைகள் ஏராளம்
இ்வ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago