மத்தியப்பிரதேசத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்த்தது போல் ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்கிறது, ஒருஎல்எம்ஏவுக்கு ரூ.25 கோடி பேரம் பேசுகிறார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸ்ஆட்சி இருந்து வந்த நிலையில் அங்கு ஜோதிர்ஆத்தியா சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்கவைத்துள்ளார்.
மேலும், மாநிலங்களவைத் தேர்தல் நடைெபறஇருக்கும் வேளையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விைலக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது
இதுகுறித்து முதல்வர் அசோக் கெலாட் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்க பாஜக தயாராகி வருகிறது. அதற்கு முன் பணமாக ரூ.10 கோடியும் கட்சியில் சேர்ந்த பின் ரூ.15 கோடியும் தருவதாக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக டெல்லியிலிருந்து ஜெய்பூருக்கு மிகப்பெரிய அளவில் ரொக்கப்பணம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எங்கள் எம்எல்ஏக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
மத்தியப்பிரதேசத்தில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றியதுபோல் ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயல்கிறது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் வியாழக்கிழமை கூடி ஆலோசிக்க இருக்கிறோம். டெல்லியிலிருந்து எம்.பி. வேணுகோபால் வருகிறார்.எங்கள் கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாமல் பாஜகதிணறி வருவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். யாரும் விலை போகமாட்டார்கள்.
ராஜஸ்தானிலும், குஜராத்திலும் பிரதமர் நரேந்திர மோடி அரசால் எம்எல்ஏக்களை விலைக்குவாங்கும் திட்டம் முடியவில்லை என்பதால் மாநிலங்களவைத் தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.”
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்
இதற்கிடையே எம்எல்ஏக்களுக்கு பாஜக பணம் வழங்கி விலைக்கு வாங்க முயல்கிறது என்று குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சியின் கொறடா மகேஷ் ஜோஷி ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இயக்குநர் அலோக் திரிபாதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக டெல்லியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஜெய்பூருக்கு நேற்று வந்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் “ மக்கள் பாஜகவுக்கு தீ்ர்ப்பு வழங்காத நிலையில் மீண்டும் ஜனநாயகக் கொலையில் ஈடுபடுகிறார்கள். இதுதான் பாஜகவின் உண்மை முகம். பாஜகவின் சதி ராஜஸ்தானில் எடுபடாது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அச்சமில்லாதவர்கள், பாஜகவின் எந்த ஆசைவார்த்தைக்கும் மயங்கமாட்டார்கள், சரியான பதிலடி கொடுப்பார்கள்” எனத் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
14 hours ago