சோனியா காந்தி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு: மும்பை காவல் நிலையத்தில் அர்னாப் கோஸ்வாமி ஆஜர்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி அவதூறு பேசியதாகக் கூறி ஏராளமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்ஸாமி விசாரணைக்காக மும்பை காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அவதூறாகப் பேசியதாகக்கூறி சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் அளித்தனர்.இதில் நாக்பூர் போலீஸ் நிலையத்தில் அர்னாப் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாக்பூரில் தொடர்ந்த எப்ஆர்ரை மும்பை என்எம் ஜோஷி மார்க் போலீஸ் நிலையத்துக்கு மாற்ற கடந்த ஏப்ரல் 21-ம்தேதி உத்தரவிட்டது. மேலும் அர்னாப் மீது 3 வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கத் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த விவகாரத்தில் புதிதாக எந்த வழக்குப் பதிவும் செய்யக்கூடாது என்றும் உத்தரவி்ட்டப்பட்டது.

மற்றொரு நிகழ்ச்சியில் குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும் விதமாக அர்னாப் கோஸ்ஸாமி பேசியதாக கடந்த 2-ம் தேதிஅர்னாப் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் சோனியா காந்தி மீது அவதூறு பேசியதாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்ரை ரத்து செய்யக்கோரியும், மும்பை போலீஸார் பதிவு செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் அர்னாப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவின் விசாரணை முடிந்தநிைலயில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு காணொலி மூலம் தீர்ப்பளித்தனர்.
அர்னாப் கோஸ்வாமி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொடுக்கபட்ட புகார்கள் மீதான விசாரணை ரத்து செய்வாகவும், ஆனால்அவதூறு வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்ஸாமி இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் உள்ள என்எம் ஜோஷி காவல்நிலையத்தில் ஆஜரானார். அங்கு காவல் துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்