ஊரடங்கு தளர்வால் வெளி மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து வரும் நிறுவனங்கள்

By ஆர்.ஷபிமுன்னா

கரோனா வைரஸ் பரவலை தடுக்க தேசிய அளவிலான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர் சொந்த ஊர் திரும்பி விட்டனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், தொழிற்சாலைகள் மற்றும் வயல்வெளிகளில் வேலைக்கான ஆட்கள் இன்றிபணிகளை தொடங்க முடியவில்லை.

இதனால், சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து அழைப்பு வரத் தொடங்கி உள்ளது. இதில், தொழிலாளர்களின் கைப்பேசிகளுக்கான ரீசார்ஜில் தொடங்கி, பேருந்து அல்லது விமானக் கட்டணம் வரை வழங்கவும் முன்வந்துள்ளனர்.

இதில், பஞ்சாபின் லூதியானா, பட்டிண்டா, பதான்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் கோதுமை பயிர் தொடர்பான பணிகளுக்காக, பிஹாரின் பக்ஸர், சஹர்சா ஆகிய பகுதிகளின் கிராமத் தொழிலாளர்கள் தயாராகினர். இவர்களை நேற்று சொகுசுப் பேருந்துகளை அனுப்பி, முன்பணம் ரூ.5,000 அளித்து திரும்ப அழைத்துக் கொண்டுள்ளனர். இதே வகையில், உ.பி.யின் லக்கிம்பூர், எட்டாவா, ரேபரேலி உள்ளிட்டபகுதிகளின் தொழிலாளர்களும் சொகுசுப் பேருந்தில் பஞ்சாபின் பணிக்கு திரும்பத் தயாராகி வருகின்றனர்.

டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத் மற்றும் நொய்டாவில் உள்ள பல பிரபல தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்காகவும் பிஹார், உ.பி. தொழிலாளர்கள் சம்மதம் அளித்து பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது. கட்டிடப் பணிகளையும் மீண்டும் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளதால் அதற்கான தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்விரண்டு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து வர ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த ஒரு பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் பிஹாரின் பாட்னாவில் இருந்து 150 தொழில்நுட்பப் பணியாளர்களுக்காக ஜூன் 15 முதல் 30 வரை விமானங்களில் முன்பதிவு செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அந்நிறுவனத்
தின் ஆந்திரா, தெலங்கானாமாநிலங்களில் பணியாற்றுவார்கள். பிறகு சென்னையின் சூழல்சரியான பிறகு அங்கு மாறுவார்
கள் எனத் தெரிகிறது.

இதனிடையே, சிறப்பு ரயில்களில் உ.பி. திரும்பிய சுமார் 21.69 லட்சம் தொழிலாளர்களுக்கு தங்கள் மாநிலத்திலேயே வேலை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

எனினும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் சில தொழிற்சாலைகள் 3 மாத ஊதியத்தைமுன்பணமாக வழங்க முன்வந்திருப்பதால் தொழிலாளர்கள் அங்கு திரும்பத் தயாராகி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்