70 வயது தாயை பல மாதங்களாக வீட்டிலேயே சிறை வைத்த மகள்- மும்பை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கணவனை இழந்து நிற்கும் 70 வயது பெண்மணியை அவரது மகளே வீட்டுக்குள் பல மாதங்களாக சிறைவைத்து உடல், மன
ரீதியாக கொடுமை இழைத்துள்ளார். இது பற்றி மகளுக்கு எதிராக அந்தப் பெண்மணி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எஸ்.ஜே.கதாவல்லா, சுரேந்திர தவடே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகள்தான். இந்த கடமையை செய்யாமல் தாயை நிம்மதியாகத்தான் வாழவிடவில்லை; அவரது வாழ்வை நரகமாக ஆக்காமலாவது இருக்கலாமே என நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். கரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால் அந்த பெண்ணையும் அவரது மகனையும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்
என இப்போதைக்கு உத்தரவிடவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இனி மூதாட்டிக்கு இருவரில் யார் கொடுமை இழைத்தாலும்
உடனடியாக இருவரும் வீட்டைவிட்டு வெளியற்றப்படுவீர்கள் என்று எச்சரித்தனர்.

பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன், பராமரிப்பு தொடர்பான 2007-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் தீர்ப்பாயத்தில் நியாயம் கேட்டு மகளுக்கு எதிராக அந்த பெண்மணி மனு செய்தார். கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக விசாரிக்க முடியாமல் போன
தால், மும்பை உயர் நீதிமன்றத்தில் அந்த மூதாட்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:

எனது மகள் தனது ஆண் நண்பருடன் வாழ்க்கை அமைத்துக் கொண்டு, 1998-ல் வீட்டை விட்டு வெளியேறினார். 2 ஆண்டுகளில் வாழ்க்கை முறிந்து எனது மகள் தனது மகனுடன் பிரிந்து வந்தார். உறவினர்கள் தலையீட்டால் லோகண்ட்வாலா பகுதியில் உள்ள எனது குடியிருப்புக்கு மீண்டும் திரும்பி வந்தார்.

சில மாதங்களில் என்னையும் எனது கணவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். இந்நிலையில், எனது கணவர் 2011 ஜனவரியில் காலமானார். அதைத்தொடர்ந்து நிதி ஆதாரங்களை பறித்துக்கொண்ட எனது மகள், என்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். வீட்டை விட்டு நான் தப்பி விடுவேன் என்ற அச்சத்தில் வீட்டுக்குள் பலமாதங்களாக சிறை வைத்தார்.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ல் வாய்ப்பு கிடைத்ததால் வீட்டை விட்டு தப்பிச்சென்றேன். சாலையை கடக்கும்போது ஆட்டோ மோதியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அதன் பிறகு நீண்ட காலமாக படுத்தபடுக்கையாக கிடந்தேன்.

கடந்த பிப்ரவரியில் எனது இன்னொரு மகள் அமெரிக்காவிலிருந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது தோள்பட்டையில் முறிவு இருப்பதும் கழுத்து நரம்பு சேதம் அடைந்திருப்பதும் தெரியவந்தது. இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்