தொடர்ந்து 3-வது நாளாக ஏறக்குறைய 10 ஆயிரம்: இந்தியாவில் கரோனா பாதிப்பு 2.66 லட்சமானது; 266 பேர் உயிரிழப்பு

By பிடிஐ


இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக ஏறக்குறைய பத்தாயிரம் பேரை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 9 ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 266 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கரோனாவால் 9 ஆயிரத்து987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 266 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்ைக 2 லட்சத்து 66 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது

கரோனாவில் சிகிச்சைபெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 917 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 214 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணக்கை 7ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த 266 உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவி்ல் 109 பேர், டெல்லியில் 62 பேர், குஜராத்தி்ல் 31, தமிழகத்தில் 17, ஹரியாணாவில் 11, மேற்கு வங்கத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 8 பேர், ராஜஸ்தானில் 6 பேர், ஜம்மு காஷ்மீரில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், பஞ்சாப், மத்தியப்பிரதேசத்தில் தலா இருவர், கேரளா, பிஹாரில் தலா ஒருவர்உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,280 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 414 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் உயிரிழப்பு 823 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 246 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 123 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 283 ஆகவும், ஆந்திராவில் 75 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 64 பேரும், பஞ்சாப்பில் 52 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 45 பேரும், ஹரியாணாவில் 39 பேரும், பிஹாரில் 31 பேரும், ஒடிசாவில் 9 பேரும், கேரளாவில் 16 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேரும், ஜார்க்கண்டில் 7 பேரும், உத்தரகாண்டில் 13 பேரும், அசாமில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,528 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 40,975 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 229 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 17,527 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 29,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,357 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 20,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,956 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 10,763 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 9,638 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 10,947 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 8,613 பேரும், ஆந்திராவில் 4,851 பேரும், பஞ்சாப்பில் 2,663 பேரும், தெலங்கானாவில் 3,650 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஜம்மு காஷ்மீரில் 4,285 பேர், கர்நாடகாவில் 5,760 பேர், ஹரியாணாவில் 4,854 பேர், பிஹாரில் 5,202 பேர், கேரளாவில் 2,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 814 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 2,994 பேர், சண்டிகரில் 317 பேர் , ஜார்க்கண்டில் 1,256 பேர், திரிபுராவில் 838 பேர், அசாமில் 2,776 பேர், உத்தரகாண்டில் 1,411 பேர், சத்தீஸ்கரில் 1,160 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 421 பேர், லடாக்கில் 103 பேர், நாகாலாந்தில் 123 பேர், மேகாலயாவில் 36 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 52 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 42 பேர், சிக்கிமில் 7 பேர், மணிப்பூரில் 272 பேர், கோவாவில் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 51 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்