ஐதராபாத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கல்வித் துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, அரசு முதன்மை செயலாளர் சோமேஷ்குமார், கல்வித் துறை சிறப்பு செயலாளர் சித்ரா ராமச்சந்திரன், முதல்வர் அலுவலக முதன்மை செயலாளர் எஸ்.நர்சிங் ராவ் ஆகியோருடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் கரோனா தொற்று வேகமாக பரவுவதால் 10-ம் வகுப்பு தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்து இன்டர்மீடியட் உயர்க் கல்விக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. மாணவர்கள் 10-ம் வகுப்பில் காலாண்டு அரையாண்டு மற்றும் தேர்வுக்கு முந்தைய மாதிரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற செய்வது என முடிவு செய்யப்பட்டது.
தெலங்கானா மாநிலத்தில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 903 மாணவ,மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுத இருந்தனர். மொத்தம் 6 பாடத்தில், 11 தாள்களுக்கு தேர்வுநடைபெற இருந்தது. அவற்றில் 2 பாடங்களுக்கான 3 தாள்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் மாநில உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்வுகளை அரசு ஒத்திவைத்தது.
இந்நிலையில் ஒத்திவைக்கப் பட்ட தேர்வுகளை ரத்து செய்துஇதற்கு முன்பு பள்ளிகளில் நடத்தப்பட்ட உள் மதிப்பீட்டுத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை உயர் வகுப்புக்கு அனுப்ப முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago