இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அமைப்பின் கீழான மைய பாதுகாப்பிலுள்ள, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட 820 இடங்கள் இன்று திறக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார். .
இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ஏ எஸ் ஐ) அமைப்பின் கீழான மையப் பாதுகாப்பில் உள்ள, வழிபாட்டுத் தலங்கள் கொண்ட 820 நினைவிடங்களை, நாளை 8 ஜூன் 20 20 முதல் முதல் திறக்க, மத்திய கலாச்சாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்பிரகலாத் சிங் படேல் அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை வெளியிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் இந்த நினைவிடங்களில் பின்பற்றப்படும் என்றும் படேல் தெரிவித்தார்.
மைய பாதுகாப்பிலுள்ள இந்த நினைவிடங்களைத் திறக்கும் போதும், நிர்வகிக்கும் போதும், மத ரீதியான இடங்களில்/ வழிபாட்டுத் தலங்களில் கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்கு பின்பற்றப்பட வேண்டியவை குறித்து மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகம் 4.6.2020 அன்று வெளியிட்டுள்ள நிலையான இயக்க வழிமுறைகள் மிகக் கவனமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை உறுதிசெய்ய வேண்டும் என்றும், கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணை கூறுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அனைத்து அறிவுரைகளும் உத்தரவுகளும் பின்பற்றப்படுவதையும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை உறுதி செய்ய வேண்டும். நாளை திறக்கப்படவுள்ள 820 நினைவிடங்கள் பட்டியலையும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்தந்த மாநிலங்கள், மாவட்டங்கள் ஆகியவை கோவிட்-19 நோய் பரவுவதைப் பாதுகாப்பது / கட்டுப்படுத்துவது தொடர்பாக வெளியிட்டுள்ள மாநில/ மாவட்ட அளவிலான ஆணைகளையும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago