தெலங்கானா மாநிலத்தில் அரசு வேலை பெறுவதற்கு தந்தையை கொன்ற மகன்

By செய்திப்பிரிவு

கருணை அடிப்படையில் அரசு வேலையைப் பெறுவதற்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டம் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான நபர், மாநில அரசு நடத்தும் சிங்கரேனி கொலியரீஸ் நிறுவனம் என்ற பொத்துறை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த மே 27-ம் தேதி காலை தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவரது மூத்த மகன், மனைவி, இளைய மகன் ஆகியோர் ஊர் மக்களிடம் தெரிவித்தனர். ஆனால் ஊர் மக்களுக்கு சந்தேகம் எழுந்ததால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியபோது, அரசு நிறுவனத்தில் தனக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைப்பதற்காக மூத்த மகன், தந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்தது.

மனைவி, தம்பி உடந்தை

இதுகுறித்து ராமகுண்டம் போலீஸ் கமிஷனர் வி.சத்யநாராயணா கூறும்போது, “விசாரணை நடத்தியபோது அரசு நிறுவனத்தில் வேலை பெறுவதற்காக மூத்த மகன் செய்த கொலை என்பது தெரிய வந்தது. இதற்கு இறந்தவரின் மனைவி, இளைய மகன் ஆகியோரும் உடந்தை எனத் தெரிய வந்துள்ளது. 25 வயதாகும் மூத்த மகன் டிப்ளமோ படித்துள்ளார். பணியில் இருக்கும் போதே தந்தை இறந்தால் தனக்கு அந்த வேலை கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்தக் கொலையை மாரடைப்பு என அரங்கேற்றி உள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்