கரோனா வைரஸ் தொற்றை 20 நிமிடங்களில் கண்டறியும் புதிய பரிசோதனை கருவி

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றை 20 நிமிடங்களில் கண்டறியும் வகை யிலான புதிய பரிசோதனைக் கரு வியை ஹைதராபாத் ஐஐடி குழுவினர் உருவாக்கி உள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி, நோயாளியின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 48 மணி நேரமாகிறது. தனியார் ஆய்வகங் களில் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை தயா ரிக்க 20 இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஐசிஎம்ஆர் அமைப்பு அனுமதி வழங்கி உள் ளது. இந்த நிறுவனங்கள் தயாரிக் கும் பரிசோதனை கருவிகள் போது மானதாக இல்லை. எனவே, வெளி நாடுகளில் இருந்தும் பிசிஆர் பரி சோதனைக் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹைதராபாத் ஐஐடி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர், கரோனா வைரஸ் தொற்றை 20 நிமிடங்களில் கண்டறியும் புதிய கருவியை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சி குழுவின் தலைவர் கோவிந்த் சிங் கூறியதாவது:

நாங்கள் கண்டுபிடித்துள்ள பரிசோதனை கருவியை தயாரிக்க ரூ.550 செலவாகும். அதிகளவில் பரிசோதனை கருவிகளை தயாரிக்கும்போது ஒரு கருவிக்கு ரூ.350 மட்டுமே செலவாகும். எங்களது கருவியின் மூலம் ஹைதராபாத்தில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்கட்ட சோதனையை நடத்தியுள்ளோம். எங்கள் கருவிக்கு அங்கீகாரம் வழங்கும்படி ஐசிஎம்ஆர் அமைப்பிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளோம்.

இவ்வாறு கோவிந்த் சிங் கூறினார்.

இதனிடையே டெல்லி ஐஐடியைச் சேர்ந்த பேராசிரியர் விவேக் ஆனந்தன் பெருமாள் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கரோனாவைக் கண்டறியும் குறைந்த விலை பரிசோதனை கருவியை அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த கருவிக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஐசிஎம்ஆர் அனுமதி வழங் கியது. புதிய கருவியை வர்த் தகரீதியில் தயாரிக்க சுமார் 40 நிறுவனங்கள் டெல்லி ஐஐடியிடம் விண்ணப்பித்துள்ளன. இதில் சில நிறுவனங்களுக்கு டெல்லி ஐஐடி அனுமதி வழங்கி, உற்பத்தியை தொடங்கி உள்ளது. இந்த கருவி சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்போது கரோனா வைரஸ் பரிசோதனை கட்டணம் ரூ.700 ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

607 ஆய்வகங்கள்

நாடு முழுவதும் 427 அரசு ஆய்வகங்கள், 180 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 607 ஆய்வகங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 46 லட்சத்து 66,386 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் தனியார் ஆய்வகங்களில் 18 சதவீத பரிசோதனைகள் மட்டுமே நடைபெறுகின்றன. புதிய கருவிகள் மூலம் கட்டணம் குறைந்தால் தனியார் ஆய்வகங்களில் பரி சோதனை எண்ணிக்கை அதிகரிக் கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்