நேரடி வரி வசூல் வளர்ச்சி சரிந்து விட்டதா? ஊடகங்கள் கூறுவது சரியா?:  நேரடி வரி வசூல் வளர்ச்சிப்பாதையை வெளியிட்ட மத்திய அரசு

By பிஐபி

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

நேரடி வரி வசூலின் வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் மிகவும் சரிந்து விட்டதென்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது நேரடி வரி வசூலின் முன்னேற்றம் எதிர்மறையை எட்டி விட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. நேரடி வரிகளின் வளர்ச்சியைப் பற்றிய சரியான தகவல்களை இந்த செய்திகள் வழங்குவதில்லை. 2018-19 நிதி ஆண்டின் நிகர நேரடி வரி வசூலை விட 2019-20 நிதி ஆண்டின் நிகர நேரடி வரி வசூல் குறைவு என்பது உண்மை தான். ஆனால், வரலாற்று சிறப்பு மிக்க வரி சீர்திருத்தங்கள் மற்றும் 2019-20 நிதி ஆண்டில் செய்யப்பட்ட மிக அதிக திரும்ப செலுத்துதல்கள் ஆகியவற்றின் காரணமாக, நேரடி வரிகளின் வசூலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றும், தற்காலிகமானதும் ஆகும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள 2019-20 நிதி ஆண்டின் நேரடி வரிகளின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தைரியமான வரி சீர்திருத்தங்களினால் உண்டாகும் வருவாய் இழப்பைக் கணக்கில் எடுத்து, மொத்த வசூலை (ஒரு வருடத்தின் திரும்ப செலுத்தப்பட்டத் தொகையின் மாறுபாட்டால் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை இது களைகிறது) ஒப்பிட்டுப் பார்த்தால் இது இன்னும் தெளிவாகும். நிதி ஆண்டு 2018-19-இன் ரூ 1.61 லட்சம் கோடியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நிதி ஆண்டு 2019-20-இல் மொத்தத் திரும்பச் செலுத்தப்பட்ட தொகை 14 சதவீதம் உயர்ந்து ரூ 1.884 கோடியாக இருக்கிறது.

I. ஏற்கனவே உள்ள அனைத்து உள்நாட்டு நிறுவனங்களுக்கும் பெருநிறுவன வரி விகிதத்தில் குறைப்பு:

வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்கப்படுத்தும் விதமாக, வரிவிதிப்பு விதிகள் (திருத்தம்) அவசரச் சட்டம் 2019 மூலமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க வரி சீர்திருத்தம் ஒன்றை அரசு கொண்டு வந்தது. ஏற்கனவே இருக்கும் அனைத்து உள்நாட்டு நிறுவனங்கள் வேறெந்தக் குறிப்பிட்ட விலக்கையோ அல்லது ஊக்கத்தொகையையோ வேண்டாத பட்சத்தில், அவர்களுக்கு 22 சதவீதம் என்னும் விகிதத்தில் வரி சலுகைக் கிடைக்கும்.மேலும், குறைந்தபட்ச மாற்று வரியில் (MAT) இருந்தும் அந்த நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

II. புதிய உள்நாட்டுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம்:

உற்பத்தித் துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, புதிய உள்நாட்டுத் தயாரிப்பு நிறுவனங்கள் வேறெந்தக் குறிப்பிட்ட விலக்கையோ அல்லது ஊக்கத்தொகையையோ வேண்டாத பட்சத்தில், அவற்றுக்கான வரி விகிதத்தை 15 சதவீதமாக பெருமளவுக் குறைத்தது. வரிவிதிப்பு விதிகள் (திருத்தம்) அவசரச் சட்டம் 2019. குறைந்தபட்ச மாற்று வரியில் (MAT) இருந்தும் அந்த நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

III. குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் குறைப்பு:

குறைந்தபட்ச மாற்று வரியைத் தொடர்ந்து செலுத்தி விலக்கு/குறைப்பு பெறும் நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

IV. ரூ 5 லட்சம் வரை சம்பாதிக்கும் தனி நபர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு மற்றும் நிலையான கழித்தல் அதிகரிப்பு:

மேலும், ரூ 5 லட்சம் வரை வரி விதிக்கக் கூடிய வருவாயாக சம்பாதிக்கும் தனி நபர்களுக்கு வருமான வரியில் இருந்து முழு நிவாரணம் அளிப்பதற்காக, ரூ 5 லட்சம் வரை வரி விதிக்கக் கூடிய வருவாயாக சம்பாதிக்கும் தனி நபர்களுக்கு வருமான வரியில் இருந்து 100 சதவீதம் வரி விலக்கை நிதி சட்டம், 2019 வழங்கியது. மேலும், சம்பளம் பெறும் வரி செலுத்துபவர்களுக்கு நிவராணம் அளிக்க, நிலையான கழித்தலை ரூ 40,000-இல் இருந்து ரூ 50,000 ஆக நிதி சட்டம், 2019 உயர்த்தியது.

2. இந்த சீர்திருத்தங்களில் வருவாய் பாதிப்பு, பெருநிறுவன வரிக்கு ரூ 1.45 லட்சம் எனவும், தனிநபர் வருமான வரிக்கு ரூ 23,200 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

3. எனவே, அசாதரணமான மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வரி சீர்திருத்த நடவடிக்கைகளின் தாக்கத்தையும், நிதி ஆண்டு 2019-20-இல் அதிகமாக வழங்கப்பட்ட திரும்ப செலுத்துதல்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், மொத்த நேரடி வதி வசூலின் முன்னேற்றம் 1.12 ஆகவும், பெருநிறுவன வரிக்கு கிட்டத்தட்ட 1 எனவும், தனிநபர் வருமான வரிக்கு 1.32 எனவும் வருகிறது. நேரடி வரிகளின் இரு அலகுகளான பெருநிறுவன வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவை உறுதியாகவும், தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதையும் இந்த முன்னேற்றங்கள் காட்டுகின்றன. மேலும், இந்த சவாலானக் காலங்களிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடும் போது அதிகரித்து வரும் நேரடி வரிகளின் வளர்ச்சி விகிதம், வரி அடித்தளத்தை விரிவுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன்களைக் கொடுப்பதையேக் காட்டுகிறது.

4. மேலும், வரி சீர்திருத்தங்களுக்குப் பின்பும் முதலீடுகள் அதிகரிக்கவில்லை என்னும் கூற்று சரியானதில்லை என்பதோடு, வர்த்தக உலகின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் வெளியிடப்பட்ட ஒன்றாகும். நிலம் வாங்குதல், தொழிற்சாலைக் கொட்டாரங்களைக் கட்டுதல், அலுவலகங்களை அமைத்தல் மற்றும் இதர உள்கட்டமைப்புகள் ஆகியவை புதிய உற்பத்தி வசதிகளைக் கட்டமைக்கத் தேவைப்படுகின்றன. இந்தச் செயல்களை சில மாதங்களில் செய்ய முடியாது மற்றும் உற்பத்தி நிலையங்கள் பொருள்களை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்தே தயாரிக்க முடியாது. செப்டம்பர் 2019-இல் அறிவிக்கப்பட்ட இந்த வரி சீர்திருத்தங்களின் விளைவுகள் அடுத்த சில மாதங்களிலும், வரும் வருடங்களிலும் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொவிட்-19-இன் பரவல் இந்தச் செயல்பாட்டை மேலும் தாமதப்படுத்தலாம். ஆனால், இந்த வரி சீர்திருத்தங்களினால் ஏற்படப் போகும் உற்பத்தி வளர்ச்சி, கட்டாயம் நடந்தே தீரும், தடுக்க முடியாது.

5. சிக்கலில்லாத வரிச் சூழலையும், மிதமான வரி விகிதங்களையும், வரி செலுத்துபவர்களுக்கு எளிதான செயல்பாட்டு முறைகளையும் அளிக்க உறுதிப் பூண்டுள்ள அரசு, நேரடி வரிகள் முறையை சீர்திருத்துவதன் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உறுதியாக உள்ளது. மேலே

குறிப்பிடப்பட்டதோடு இல்லாமல், இந்த திசையில் எடுக்கப்பட்ட மேலும் சில சமீபத்திய நடவடிக்கைகளை, கீழே காணலாம்:

I. தனிநபர் வருமான வரி - தனிநபர் வருமான வரியை சீர்திருத்தம் நோக்கில், தனிநபர்களும் கூட்டுறவு நிறுவனங்களும் வேறெந்தக் குறிப்பிட்ட விலக்கையோ அல்லது ஊக்கத்தொகையையோ வேண்டாத பட்சத்தில், வருமான வரியை சலுகை விகிதங்களில் செலுத்தும் வாய்ப்பை நிதிச் சட்டம், 2020 அவர்களுக்கு அளித்தது.

II. ஈவுத்தொகை விநியோக வரி நீக்கம்- இந்திய பங்குச் சந்தையின் கவர்ச்சித் தன்மையை அதிகரிக்கும் நோக்கிலும், ஈவுத்தொகை விநியோக வரி விகிதத்தை விட வரி விதிக்கப்படும் ஈவுத்தொகை வருவாய் விகிதம் குறைவாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதத்திலும் ஈவுத்தொகை விநியோக வரியை நிதி சட்டம், 2020 நீக்கியது. இதன் மூலம், 01.04.2020-இல் இருந்து ஈவுத்தொகை விநியோக வரியை நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை. ஈவுத்தொகைப் பெற்றுக்கொள்பவர்களிடம் இருந்து அவர்களுக்குப் பொருத்தமான விகிதங்களில் ஈவுத்தொகை வருவாய்க்கு வரி விதிக்கப்படும்.

II. தகராறில் இருந்து நம்பிக்கை (விவாத் சே விஷ்வாஸ்)- நேரடி வதிகள் தொடர்பான பெரும் எண்ணிக்கையிலான தகராறுகள், ஆணையரில் (மேல் முறையீடுகள்) இருந்து உச்ச நீதிமன்றம் வரை பல்வேறு நிலைகளில் தற்சமயம் நிலுவையில் உள்ளன. அரசு மற்றும் வரி செலுத்துவோரின் வளங்களை இந்த வரித் தகராறுகள் பெரும் அளவில் நேரத்தை வீணடிப்பதோடு, சரியான நேரத்தில் வரி வசூல் செய்வதில் இருந்து அரசை இவை தடுக்கின்றன. இந்த உண்மைகளை மனதில் கொண்டு, நிலுவையில் உள்ள வரித் தகராறுகளைக் களைய வேண்டியத் தேவை உணரப்பட்டது. சரியான நேரத்தில் வரி வருவாயை ஈட்டி அரசு பயன் பெற இது உதவுவதோடு, வரி செலுத்துபவர்களையும் அதிகரிக்கும் வழக்கு செலவுகளில் இருந்து காத்து, அவர்களின் தொழில் நடவடிக்கைகளில் அதிகமான முயற்சிகளை எடுக்க வழிவகுக்கிறது. 17 மார்ச், 2020 அன்று இயற்றப்பட்ட விவாத் சே விஷ்வாஸ் சட்டத்தின் கீழ், தகராறுகளைத் தீர்ப்பதற்கான அறிவிப்புகள் தற்போது செய்யப்படுகின்றன.

IV. முகம் தேவைப்படாத மின்-மதிப்பீட்டுத் திட்டம்: 12 செப்டம்பர், 2019 அன்று அறிவிக்கப்பட்ட இந்த மின்-மதிப்பீட்டுத் திட்டம், 2019, மதிப்பீட்டு அலுவலருக்கும், மதிப்பீடு செய்யப்படுபவருக்கும் இடையேயான நேரடித்

தொடர்பை நீக்கி, மதிப்பீடு செய்ய புதிய முறையை வழங்குகிறது. செயல்பாட்டு நிபுணத்துவம் மூலமும், குழு-சார்ந்த மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வளங்களின் சிறப்பான பயன்படுத்துதலுக்கு இது வழி வகுக்கிறது.

V. நேரடி சந்திப்பு இல்லாமல் மேல் முறையீடுகள்- சீர்திருத்தங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், மனித இடையீட்டை நீக்கும் வகையிலும், மேல் முறையீடு செய்பவருக்கும், வருமான வரி ஆணையருக்கும் (மேல் முறையீடு) இடையே துறையின் மேல் முறையீட்டு நடவடிக்கையில் நேரடி சந்திப்பு இல்லாத மேல் முறையீட்டுத் திட்டத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு நிதிச் சட்டம், 2020 அதிகாரம் அளிக்கிறது.

VI. கோப்பை அடையாளப்படுத்தும் எண் (DIN) - வருமான வரித் துறையின் செயல்பாட்டில் செயல்திறனையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் வகையில், மதிப்பீடு, மேல் முறையீடு, விசாரணை, அபராதம், தீர்வு மற்றும் இதர விஷயங்கள் தொடர்பான எந்தக் கடிதமாக இருந்தாலும், கணினி-உருவாக்கிய பிரத்யேக ஆவண அடையாள எண்ணை 01 அக்டோபர், 2019-இல் இருந்து கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்,

VII. வருமான வரிக் கணக்கை முன்கூட்டியே தாக்கல் செய்தல்- வரி தாக்கலை இன்னும் சுலபமானதாக்கும் வகையில், வருமான வரிக் கணக்கை முன்கூட்டியே தாக்கல் செய்யும் வசதி (ITR) வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பள வருவாய் போன்ற சில வருவாய்கள் ITR படிவத்தில் தற்போது ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளன. ITR-இல் இன்னும் அதிக பரிவர்த்தனைகளை முன்னரே நிரப்புவதன் மூலம், தகவல்களை முன்கூட்டியே நிரப்பும் வசதி தொடர்ந்து விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

VIII. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல்- பொருளாதாரத்தின் டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், கணக்கில் வராத பரிவர்த்தனைகளைக் குறைக்கும் நோக்கிலும், டிஜிட்டல் விற்றுமுதலின் உத்தேச லாப விகிதம் குறைப்பு, குறிப்பிட்ட பரிவர்த்தனை முறைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) நீக்கம், பணப்பரிவர்த்தனைகளுக்கான வழிகள் குறைப்பு, சில பணப் பரிவர்த்தனைகளுக்குத் தடை உள்ளிட்டப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

IX. புது நிறுவனங்களுக்கான (ஸ்டார்ட்-அப்) இணக்க விதிகள் எளிமைப்படுத்துதல்- மதிப்பீட்டு முறையை எளிதாக்குதல், தேவதை வரியில் இருந்து விலக்குகள், பிரத்யேக ஸ்டார்ட்-அப் பிரிவு போன்ற நடவடிக்கைகளின் மூலம் புது நிறுவனங்களுக்கு சிக்கலில்லாத வரி சூழல் வழங்கப்பட்டுள்ளது.

X. வழக்கு விதிகளில் இருந்து தளர்வுகள்- வழக்குத் தொடுப்பதற்கான வழிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. வழக்குத் தொடுப்பதற்கு ஒப்புதலளிக்க மூத்த அதிகாரிகளைக் கொண்டக் குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுக்கான விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

XI. மேல் முறையீடுத் தாக்கல் செய்வதற்கான நிதி அளவு அதிகரிப்பு- வரி செலுத்துவோரின் குறைகளை/வழக்குகளைப் பெருமளவுக் குறைக்கும் வகையிலும், சிக்கலான சட்ட விஷயங்களிலும், அதிக வரி விவகாரங்களிலும் வருமான வரித் துறையை கவனம் செலுத்த வைக்கும் நோக்கிலும், வருமான வரி மேல் முறையீட்டு ஆணையத்தில் மேல் முறையீடு செய்வதற்கான வரம்பு ரூ 20 லட்சத்தில் இருந்து ரூ 50 லட்சமாகவும், உயர் நீதி மன்றத்துக்கு ரூ 50 லட்சத்தில் இருந்து ரூ 1 கோடியாகவும், உச்ச நீதி மன்றத்துக்கு ரூ 1 கோடியில் இருந்து ரூ 2 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

XII. TDS/TCS-இன் வாய்ப்பு அதிகரிப்பு- வரி அடித்தளத்தை விரிவுபடுத்தும் வகையில், ஆதாரத்தில் கழிக்கப்படும் வரி (TDS) மற்றும் ஆதாரத்தில் வசூலிக்கப்படும் வரி (TCS) ஆகியவற்றின் வரம்புகளின் கீழ் பல்வேறு புதிய பரிவர்த்தனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிகமாகப் பணம் எடுத்தல், வெளிநாட்டுப் பணபரிவர்த்தனை, சொகுசு கார் வாங்குதல், மின்-வணிகத்தில் பங்கு பெறுதல், பொருள்களை விற்றல், அசையாச் சொத்துகளை வாங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்