டெல்லியில் சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) பேருந்து ஊழல் வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிப்பதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கேஜ்ரிவால் அரசு சார்பில் பி.எஸ்.ஜான் என்பவரும் டெல்லி போலீஸ் சார்பில் சஞ்சய் குப்தா என்பவரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக் கப்பட்டனர். இதுகுறித்து ‘தி இந்து’ விடம் டெல்லி மாநில அரசின் உயரதி காரிகள் கூறும்போது, “இந்த விவகாரத்தில் முதல்வர் -ஆளுநர் இடையே மீண்டும் மோதல் கிளம்பி யுள்ளது. இதில் இந்த முறையும் ஆளுநருக்கே வெற்றி கிடைத் துள்ளது. ஏனெனில் அவரால் பரிந் துரைக்கப்பட்ட சஞ்சய் குப்தாவை சிறப்பு வழக்கறிஞராக நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. முதல்வரின் பரிந்துரைக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறாததால் அதை ஏற்கமுடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது” என்று தெரிவித்தனர்.
கேஜ்ரிவால் அரசு பரிந்துரைத்த கோப்பில், ‘இதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை’ என்று உள்துறை அமைச்சகமும் சட்ட அமைச்சகமும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை ஏற்காமல் கேஜ்ரிவால் அரசு தனித்து செய்த பரிந்துரையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
ஏற்கெனவே, டெல்லி லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவரை நியமிப் பதில் கேஜ்ரிவால் நஜீப் ஜங் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவராக டெல்லி காவல்துறையின் கூடுதல் ஆணையர் எஸ்.எஸ்.யாதவை கேஜ்ரிவால் நியமித்தார். ஆனால், இந்தப் பிரிவின் தலைவருக்கும் மேலாக ஒரு சிறப்பு பதவியை அதே நாளில் உருவாக்கிய நஜீப் ஜங், அந்த இடத்தில் டெல்லி காவல் துறை இணை ஆணையர் முகேஷ் குமார் மீனாவை நியமித்து விட்டார்.
இது தொடர்பாக கருத்து கூறிய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, “சிஎன்ஜி பேருந்து ஊழலில் வெளியாக இருக்கும் பல உண்மைகளுக்கு பயந்து ஊழல் தடுப்பு பிரிவின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளாரா?” என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து சிஎன்ஜி வழக்கை விசாரிக்கும் ஊழல் தடுப்பு பிரிவில் தாம் ஆளுமை செலுத்த முடியாது என உணர்ந்த கேஜ்ரிவால், அதன் மீது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். இதற்கு தடை கோரி குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவரான உசைன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, டெல்லியில் கடந்த 2002 முதல் அரசுப் பேருந்துகளின் இன்ஜின்கள் இயற்கை எரிவாயு வால் (சிஎன்ஜி) இயங்கும் வகை யில் மாற்றி அமைக்கப்பட்டன. ஷீலா தீட்சித் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு இப்பணியை மேற்கொண்டது. இதற் கான சாதனங்களை தனியாரிடம் வாங்கி தகுதித் தேர்வு சோதனைகள் நடத்தியது தொடர்பாக ரூ. 100 கோடி ஊழல் புகார் கிளம்பியது. இதன் மீது கடந்த 2012-ல் ஷீலா தீட்சித் ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2013, பிப்ரவரியில் டெல்லி முதல்வராக கேஜ்ரிவால் பதவி யேற்ற பின், சிஎன்ஜி பேருந்து ஊழல் வழக்கு மீண்டும் எடுக்கப்பட் டது. இவ்வழக்கில் டெல்லியின் முன்னாள் போக்குவரத்து ஆணையர்கள் ஆர்.கே.வர்மா, ஆர்.சந்திரமோகன் எனும் இரு ஐஏஎஸ் அதிகாரிகள், 4 அரசு அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago