கரோனா வைரஸால் மோசமாக பாதி்க்கப்பட்ட நாடுகள் பட்டியலில் நேற்றுதான் இத்தாலியைக் கடந்திருந்த இந்தியா அடுத்த 24மணிநேரத்தில் ஸ்பெயினைக் கடந்து 5-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது
கடந்த 24மணிநேரத்தில் இந்தியாவில் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் அதாவது 9 ஆயிரத்து 971 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 287 பேர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் இந்தியாவி்ல் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 268 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 292 பேர் குணமடைந்துள்ளனர், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கணக்கீட்டின்படி உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினை மிஞ்சி இந்தியா 5-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது.
முதலிடத்தில் அமெரிக்கா(19,19,430), பிரேசில்(6,45,771) ரஷ்யா(4,58,102), பிரிட்டன்(2,86,294), இந்தியா(2,46,622), ஸ்பெயின்(2,41,310), இத்தாலி(2,34,801) நாடுகள் உள்ளன. உலகளவில் கரோனா பாதிப்பு 68 லட்சத்து 55 ஆயிரத்து858 ஆக இருக்கிறது. உயிரிழப்பு ஏறக்குறைய 4 லட்சத்தை நெருங்கி, 3,98,321 ஆக இருக்கிறது
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,219 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 399 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 383 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் உயிரிழப்பு 761ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 231 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 123 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 257 ஆகவும், ஆந்திராவில் 73 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 59 பேரும், பஞ்சாப்பில் 50 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 39 பேரும், ஹரியாணாவில் 24 பேரும், பிஹாரில் 30 பேரும், ஒடிசாவில் 8 பேரும், கேரளாவில் 15 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேரும், ஜார்க்கண்டில் 7 பேரும், உத்தரகாண்டில் 11 பேரும், அசாமில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,968 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 37,390 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 152ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 27,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,664 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 19,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,316 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 10,331 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 9,228 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 9,733 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 7,738 பேரும், ஆந்திராவில் 4,510 பேரும், பஞ்சாப்பில் 2,515 பேரும், தெலங்கானாவில் 3,496 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 3,467 பேர், கர்நாடகாவில் 5213 பேர், ஹரியாணாவில் 3,952 பேர், பிஹாரில் 4,915 பேர், கேரளாவில் 1,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 762 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 2,781 பேர், சண்டிகரில் 309 பேர் , ஜார்க்கண்டில் 1000 பேர், திரிபுராவில் 747 பேர், அசாமில் 2,397 பேர், உத்தரகாண்டில் 1,303 பேர், சத்தீஸ்கரில் 923 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 400 பேர், லடாக்கில் 99 பேர், நாகாலாந்தில் 107 பேர், மேகாலயாவில் 33 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 36 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 24 பேர், சிக்கிமில் 7 ேபர், மணிப்பூரில் 157 பேர், கோவாவில் 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 47 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago